தொடர்புடைய கட்டுரை


மாற்று உபகரணம்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

01st Nov 2019

A   A   A

கணினியை பற்றிய அறிவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருப்பதாகும். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக விஷயங்கள் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரு அதிநவீன தொழுல்நுட்ப துறையே இந்த கம்ப்யூட்டர் துறை. அதனால் நாம் அவ்வப்போது கம்ப்யூட்டர் தொடர்பான விஷயங்களை புதுப்பித்துக்கொள்வது சிறந்ததாகும். விளையாட்டு போட்டிகளில் விளையாடுபவருக்கு பதிலாக மற்றொரு விளையாட்டு வீரரை களத்தில் இறக்குவது போலவும், தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு மாற்றாக மற்றொரு வேட்பாளரை நிறுத்துவது போலவும் இந்த மாற்று கருவிகள் கம்ப்யூட்டர் இயக்கத்தில் நமக்கு பேருதவியாக அமைகிறது. இத்தகைய கருவிகளையே ஆல்டர்னேட்டிவ் டூல் என்று கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் அழைக்கிறார்கள். கம்ப்யூட்டர்கள் நாம் உபயோகிக்கும் மென்பொருட்கள் பலவும் நாம் விலை கொடுத்து வாங்கியே பயன்படுத்துகிறோம். பல சமயங்களிலும் இப்படி காசு கொடுத்து வாங்கிய பல மென்பொருள்களை பரிசோதிக்கும் போதுதான், ‘இது பரிசோதனைக்கு மட்டும் உரிய ஒன்றாகும் (trail version), புதுப்பிக்கவும் (upgrade) என்று நமது கம்ப்யூட்டர் சொல்லும்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் விலை கொடுத்து வாங்கவேண்டிய பல மென்பொருள்கள், நிரலிகள் (programmes) ஆகியவற்றுக்கு சமமாகவோ அல்லது அவற்றைவிட மேலானதாகவோ நமக்கு பயன்படக்கூடிய பல மென்பொருள்களும் இருக்கின்றன. இவை முற்றிலும் இலவசமானவை ஆகும். எடுத்துக்காட்டாக மைக்ரோசாஃப்ட் ஆபீசுக்கு பதிலாக, ஓப்பன் ஆஃபீஸ், போட்டோ ஷாப்புக்கு பதிலாக ஜிம்பி ஷாப் போன்றவைகள்.

இத்தகைய மென்பொருள்களை பற்றி நமக்கு முழுமையான விவரங்களை தருகின்ற எல்லாவற்றையும் ஒரே தளத்தில் நாம் தெரிந்துகொள்ள முடியும். இதற்காக பயன்படும் இந்த தளம்தான் alternativeto.net. இந்த இணைய பக்கத்தில் விண்டோஸ், மாக், லினெக்ஸ், ஆன்டிராய்டு என்று ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கு ஏற்றமாதிரி செயல்படுகிற ஆல்டர்னேட்டிவ் அல்லது மாற்றாக உபயோகிக்கக்கூடிய மென்பொருள்கள் மற்றும் நிரலிகளை பற்றிய தகவல்கள் நமக்கு கிடைக்கும்.

இந்த பக்கத்தில் சென்றவுடன் சேர்ச் பாக்சில் ஒரு மென்பொருள் பெயரை டைப் செய்தால் அவற்றிற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மற்ற மென்பொருள் அல்லது நிரல்களுடைய பெயர்களை ஒரு பெரிய பட்டியலாக அந்தப் பக்கம் நமக்கு காட்டும். இதை பயன்படுத்தி நமது கணினிக்கு தேவையான மென்பொருள்களையோ அல்லது நிரல்களையோ முழுவதும் இலவசமாக பயன்படுத்தும் விதத்தில் தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம்.

 


நவம்பர் 2016 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்