தொடர்புடைய கட்டுரை


4ஜி அலைவரிசை

சிதம்பரம் ரவிச்சந்திரன்

16th Aug 2018

A   A   A

நவீன தொலைதொடர்பு உலகம் நாளுக்குநாள் புதிது புதிதாக பல புதிய கண்டுபிடிப்புகளுடன் நாளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.  முன்பொருகாலத்தில் 2ஜி அலைவரிசை என்றாலே அது பெரிய சாதனையான ஒரு விஷயமாக கருதப்பட்டுவந்தது. ஆனால், இன்று 4ஜி அலைவரிசை வரை வளர்ந்துள்ளது.  4ஜி என்றால் என்ன..? 

ஒரு நொடிக்கு 100 எம்.பி வரை வேகமுடைய வயர்லெஸ் மொபைல் கொண்ட அலைவரிசை இணைப்பைதான் (wireless mobile broadband connection) 4 ஜி அலைவரிசை என்று அழைக்கிறோம். உயர்ந்த தரமான வீடியோ காட்சிகளையும், ஆடியோவையும் அதிவேகமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரிமாறுவதற்குரிய ஒரு நவீன தகவல் தொடர்பு வசதிதான் இது. காணொளி மூலம் பேசுவது இதன் மூலம் மிகவும் எளிதானதாகும். 

உயர்தர மொபைல் தொலைகாட்சி (High definition mobile television), முப்பரிமாண தொலைகாட்சி (3d television) போன்ற நவீனமான வசதிகளும் இதன் மூலம் நமக்குக் கிடைக்கும். 2012 ஏப்ரலில் பாரதி ஏர்ட்டெல் நிறுவனம்தான் இந்தியாவில் முதல்முதலாக 4 ஜி அலைவரிசையை ஆரம்பித்தது. இதன் தொடக்கம் நிகழ்ந்த இடம் கொல்கத்தா ஆகும். 4 ஜி அலைவரிசையின் வழியாக வைமாக்ஸ் (wi macs service) சேவையையும் நாம் பெறலாம். Worldwide inter operatisity for microwave access என்பதன் சுருக்கம்தான் வைமாக்ஸ் என்பது. 

மின்னல் வேகத்தில் அதிவேகமாக இணையதள பயன்பாட்டாளர்களுக்கு கிடைக்கக்கூடிய அதிநவீனமான தொழில்நுட்ப வசதியாகும் இது. கேபிள் கம்பிகளுக்குப் பதிலாக தரவு பரிமாற்றத்திற்கும் (data transmission) இது பயன்படுகிறது. அடிப்படையான தளத்தில் (base station) இருந்து உபயோக்கிப்பாளருக்கு உள்ள தூரம் அதிகமாக அதிகமாக இணையதளத்தின் வேகம் குறையும். கூடியபட்சம் 113 கி.மீட்டருக்குள் இந்த வை மாக்ஸ் வசதி எளிதாக நமக்குக் கிடைக்கும். உபயோகிப்பாளர் பயணித்துக் கொண்டிருந்தால் இதன் சேவை பலவீனமாக இருக்கும். 

காட்சிதளத்தில் 10 கி.மீட்டர் தூரத்திற்குள் இதன் வேகம் 10 MB ஆக இருக்கும்.  மழை பெய்யும்போதும் இடையிடையே தடங்கல்கள் ஏற்படும்தான் என்றாலும், இணையதளத்தின் வேகம் குறையவோ அல்லது முழுவதுமாக துண்டிக்கப்படவோ வாய்ப்பு உண்டு. 

இது போன்ற நவீன தகவல் தொடர்பு வசதிகளை நல்ல காரியங்களுக்காக நாம் பயன்படுத்தி நல்லவற்றை சாதிக்க முயற்சி செய்வோம்..

 


செப்டம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது.

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.