தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை - 37

F. பிரைட் ஜானி

22nd Jul 2018

A   A   A

கோலிவுட் சினிமா தமிழ் சினிமா என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள சென்னைப் பகுதியை மையமாகக் கொண்டு தமிழ் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 1918-ஆம் ஆண்டு, முதல் தமிழ் ஊமை படம் கீச்சாக்கா, வேதம் நடராஜ முதலியார் என்பவரின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் தமிழ் பேசும் திரைப்படம் ஆலம் ஆரா மார்ச் 1931-ஆம் ஆண்டிலும், மேலும் அக்டோபர் 1931-ஆம் ஆண்டு காளிதாஸ் திரைப்படமும் திரையிடப்பட்டது. தமிழ் திரைப்படத்தின் வளர்ச்சி தற்போது மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.

ஜனவரி 1986-ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் விக்ரம் திரைப்படமானது திரையிடப்பட்டது. இத்திரைப்படம் முதலே தமிழ் சினிமாவில் பாடலை பதிவு செய்ய கம்ப்யூட்டர் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. அக்டோபர் 1992-ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படமானது பரதன் இயக்கத்தில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் முதன் முதலாக ஸ்கிரீன் ரைட்டிங் மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. அக்டோபர் 1995-ஆம் ஆண்டு பி.எஸ். ஸ்ரீராம் இயக்கத்தில் குருதிபுனல் திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் முதன் முதலாக எஸ்.ஆர். டெக்னாலஜி - இல் டோல்பி ஸ்டீரியோ சரௌண்ட் பயன்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 2003-ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படமானது திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் ‘அலேய் அலேய் பாடலின் காட்சிக்காக ஒரே நேரத்தில் 62 காமராக்கள் டைம் பிரீஸ் (time freeze techniques) தொழில்நுட்பத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு தமிழ் திரைப்படத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது இல்லை. ஜனவரி 2004-ஆம் ஆண்டு கமலஹாசன் தயாரிப்பில் விருமாண்டி திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் முதல் முதலாக நேரடி ஒலிப்பதிவு முறை பயன்படுத்தப்பட்டது. இதற்காக நியூயென்டொ என்ற கருவி படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்பட்டது.

ஏப்ரல் 2005-ஆம் ஆண்டு சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திலே முதன் முதலாக டிஜிட்டல் முறை பயன்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து தமிழ் திரைப்படத்திலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. மே 2006-ஆம் ஆண்டு புதுபேட்டை திரைப்படம் செல்வராகவன் இயக்கத்தில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் முதன் முதலாக 35 எம்.எம் பிலிம் வடிவம் பயன்படுத்தப்பட்டது.

ஜூலை 2010-ஆம் ஆண்டு எம். ராஜா இயக்கத்தில் தில்லாலங்கடி திரைப்படமானது திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் சொல்பேச்சு கேட்காத சுந்தரி பாடலானது நீரோ மோஷன் கன்ட்ரோல் கேமரா உதவியுடன் படமாக்கப்பட்டு திரையிடப்பட்டது. இது 360 டிகிரி கோணத்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா பாடலாகும். ஹாலிவுட்டில் பல திரைப்படங்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அக்டோபர் 2012-ஆம் ஆண்டு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மாற்றான் திரைப்படமானது திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திலே முதன் முதலாக பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது.

பிப்ரவரி 2013-ஆம் ஆண்டு கமலஹாசன் இயக்கத்தில் விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் முதன் முதலாக ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. டிசம்பர் 2013-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரியாணி திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சிக்காக மட்டும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மே 2014-ஆம் ஆண்டு சவுந்தர்யா அஸ்வின் தயாரிப்பில் கோச்சடையான் திரைப்படமானது திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் 3டி மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இத்திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது.

ஜூலை 2015-ஆம் ஆண்டு பாகுபலி திரைப்படமானது திரையிடப்பட்டது. இதன் இரண்டாம் பாகமானது ஏப்ரல் 2017-ஆம் ஆண்டு எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் திரையிடப்பட்டது. சங்கரின் இயக்கத்தில் ஜனவரி 2018-ஆம் ஆண்டு 2.0 எனும் திரைப்படமானது திரையிடப்படவிருக்கிறது. இதுபோன்ற பிரம்மாண்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. ஹாலிவுட்டில் அதிகமாக பயன்படுத்தப்படும் 3டி, மோஷன் கேப்சர் மற்றும் விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்களும் தற்போது தமிழ் சினிமாவிலும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது தமிழ் சினிமாவும் மிக அதிகமான தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


ஜனவரி 2018 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்
Error
Whoops, looks like something went wrong.