நமக்கு நாமே காவல்

Dr. பா. நாகராஜன்

24th Jun 2019

A   A   A

இரண்டு வாரங்களுக்கு முன்பு பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் என்னும் நகரத்திற்கு அருகே ஒரு கோர விபத்து நடந்ததை மீடியாக்களின் வாயிலாக நேரடி காட்சிகளையும் செய்திகளையும் கண்டோம். தசரா பண்டிகைக்கென நடந்த கொண்டாட்டங்களில் இந்த விபந்து நடந்ததாக தெரிய வந்தது. ஓர் மைதானத்திற்கு அருகே இரண்டு தண்டவாளங்கள் மைதானத்திற்கும் இரயில் பாதைகளுக்கும் மிகக் குறுகிய இடைவெளி மைதானம் ஏறக்கூறை 500 பேர் நிற்கலாம் என உள்ள அளவு மைதானத்தின் அந்தி சாயும் வேளையில் இராமர் வேடம் தரித்து ஒரு நபர் இராவணன் சிலை மேல் அம்பு எய்வதாக ஓர் ஏற்பாடு பெரிய அளவில் இராவணன் சிலையை கம்பு அட்டை காகிதம் இவற்றால் உருவாக்கி 10 தலையும் தோளில் மேல் வைத்து அழகுறித்தி நிறுத்தி வைத்திருந்தார்கள். உயரமான சிலையின் உடல் உள்ள ஏராளமான பட்டாசு வெடிகள் கொண்டாட்டம் ஆரம்பிக்கும் பொழுதே இராமர் மற்றும் மனித இராவணன் (அதாவது வேடம் தரித்தவன்) இவர்களது ஆட்டமும் பலத்த கைதட்டுகளை பெற்றது.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் அதிகரித்தது. ஏறக்குறைய 700 பேர் கூடியிருக்கின்றனர். நாம் நாட்டில் தான் வேடிக்கை என்றால் கூட்டம் கூட கேட்கவும் வேண்டுமா? நம் நாட்டில் இருக்கும் ஜனத் திரளுக்கு நல்லது கெட்டது பாராமல் எதற்கு எடுத்தாலும் கூட்டம் கூடுவது இயல்புதானே. அவ்வாறே இங்கும் கூட்டம் கூடியிருந்தது. மைதானத்தில் இடம் போதுமானதாக இல்லாததால் அதையும் தாண்டி மக்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் சிக்ஸர் சித்து என்று கூறுவோம் அல்லவா (அதாவது கிரிக்கெட் வீரர்) அவரது மனைவி. ஆட்டங்கள் எல்லாம் முடியும் தருவாயில் இராமன் அம்பு விடுவதும் இராவணனின் உருவ பொம்மை மேல் அம்பு பட்டதும் தீப்பற்றி எரிந்து அந்த உருவ பொம்மையின் உடலின் சுற்றப்பட்டிருக்கும் பட்டாசுகள் ஒட்டு மொத்தமாக ஒரே சமயத்தில் வெடிப்பதும் கண்கொள்ளா காட்சியாகக் கருதப்பட்டது. அனைத்தும் ஏற்பாடுகளின் படியே தான் நடந்தேறியது. ஆனால் பட்டாசு வெடிக்கும் சமயம் கூட்டம் அதிகமாக இருந்தாலும் மேலும் இராவணன் உருவ பொம்மை இரயில் பாதைக்கு அருகில் இருந்ததாலும் உருவ பொம்மையின் பின் நின்றிருந்த மக்கள் கூட்டம் ஏற்கெனவே இரயில் பாதையின் மேல் நின்றிருந்த கூட்டத்தின் மேல் மோதினர்.

இச்சமயத்தில் தான் விதி தன் வேலையை செய்கிறது. ஒரு இரயில் பாதையில் நின்றிருந்த மக்கள் தங்கள் எதிரே இரயில் வருவதை கவனித்து அடுத்த இரயில் பாதைக்கு ஓடுகின்றனர். அங்கு பார்த்தால் அவர்களின் எதிரே எதிர் திசையிலும் இரயில் வண்டி. ஆக இருபக்கங்களிலும் மக்கள் கூட்டத்தை நசுக்கி தள்ளினர். ஏறக்குறைய 61 பேர் உடனே இறந்ததாகவும் 80 பேருக்கும் மேல் படுகாயம் அடைந்ததாகவும் நாளிதழில் போட்டிருந்தது. அதன் பின்னர் 2, 3 நாட்கள் பேப்பர்களில் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டியபடி அரசியல்வாதிகளும் இரயில்வே அலுவலர்களும் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருந்தன. மத்திய அரசு மாநில அரசு மீதும் மாநில அரசு மத்திய அரசு மீதும் இரயில்வே நிர்வாகத்தினால் விழா நடத்த உள்ளாட்சி அலுவலகத்தினர் எங்களிடம் அனுமதி பெறவில்லை என்று கூறினர். ஓர் இரயில்வே அலுவலர் தண்டவாளம் இரயில் ஓடுவதற்கு தானே ஒழிய வேடிக்கை பார்க்க கூட்டம் கூடுவதற்கு அல்ல என்று கூறினார். தலைமை தாங்கிய நவ்ஜோத் சித்துவின் மனைவி விபத்து நடந்த சிலகணங்களில் கார் ஏறி சென்றுவிட்டார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இராவணன் வேடமிட்டு நடனமாடியவர் 4, 5 நபர்களை காப்பாற்றிவிட்டு அவர் தவறி இரயில் பாதையில் விழுந்து இறந்தார். மீடியாக்களுக்கும் அகில இந்திய பொதுமக்களுக்கும் அன்று ஒருநாள் மட்டும் இது தலைப்புச் செய்தி. ஆனால் இரயில்வே நிர்வாகத்திற்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இது விபத்து மட்டுமே. ஆனால் காயம்பட்டவர்களுக்கு எத்தனை நாட்கள் சொல்லவொண்ணா துன்பம் என பிறர் அறியார். மிகவும் சுலபமாக அரசுகள் தலைக்கு இவ்வளவு இலட்சம் என்று அறிவித்துவிட்டார்கள். மரணம் அடைந்தவர்களுக்கு கூடுதலாகவும் காயம் அடைந்தவர்களுக்கு குறைவாகவும் என உயிர்க்கும் உடற்பாகங்களுக்கும் விலை வைத்து பேசினர். உண்மையில் இவ்விடத்தில உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர் எத்தனை பேர் இன்னும் இறந்தவர் எத்தனை பேர் எதிர் காலத்தில் ஊனமாக இருக்கபோவோர் எத்தனை பேர் என ஊடகங்களுக்கு கவலையில்லை அரசுக்கும் தான் ஏன் மக்கும் தான்.

இவ்விடத்தை இந்த அளவு வரி வாரியாக நான் ஏன் விவரித்தேன் என்றால் அதற்கு ஒரே ஒரு குறிப்பிட்ட காரணம் மட்டுமே என்னவெனில் ’உன் உடலுக்கு நீ மாத்திரமே காவல் இருக்க முடியும் உன் உயிருக்கு நீ மாத்திரமே காவல் இருக்க முடியும்’ என்பதுதான். இடம் பொருள், நிகழ்வு, நபர், விதி, ஏன் கடவுளையும் கூட நீ குற்றம் சாட்ட இயலாது எங்கெல்லாம் கூட்டம் அதிகம் கூடுகிறதோ அங்கெல்லாம் ஆட்டு மந்தைகள் போல் அறிவிலிகள் கூடுகிறார்கள் என்பதே என் எண்ணம். தன்னுணர்வற்ற ஆட்டம் கொண்டாட்டம் இவை எப்போதுமே ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. எனது கலந்தாலோசனை அறைக்கு வந்த ஓர் பெண்மணி கீழ்காணுமாறு கூறினார். அவரது வீட்டிற்கு அருகே இவரது உறவினரான ஓர் வாலிபனும் அவனின் நண்பனும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது பின்னால் அமர்ந்திருந்தவன் செல்பி எடுப்பதற்காக இவனை அதாவது வாகனம் ஓட்டுபவனை திரும்ப சொல்லியிருக்கிறான். அவன் திரும்ப அதே கணம் அவர்களது வாகனம் சுவற்றில் மோதி இருவரும் தூக்கி எறியப்பட்டு உடனடியாக மரணமடைந்ததாக கூறி வருத்தப்பட்டார்.  இவரது மன உளைச்சலுக்கு காரணம் அவ்விரு வாலிபர்களின் துர்மரணமே.

ஆண்டவன் விதிப்படி, நேரம் சரியில்லை, இராசி இப்படித்தான் என்று கூறி நிறைய செயல்களில் தம் கவனத்தை செலுத்தாது வாழ்க்கையை கோட்டைவிட்டு விடுகின்றனர். உண்மையில் கூறப்போனால் ஒட்டு மொத்த இந்திய ஜனத்தொகைக்கும் கூடுதல் உணர்ச்சி வசப்பட்டு கொந்தளிப்பதும், உருப்படியான காரியங்களில் உணர்வற்று இருப்பதும் ஒரு தேசிய வியாதியாக இருக்கிறது. அது முக்கியமான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தேவை இல்லாத காரியங்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து நம் சக்தியை வீணாக்கி கொள்கிறோம். பொதுவாக நாம் சென்சேசனல் செய்திகளுக்கு அடிமையாகிவிட்டோம் என்று எண்ணுகிறேன். 

 


நவம்பர் 2018 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.