தொடர்புடைய கட்டுரை

பாம்புத் தீவு

மெல்விலா

03rd Oct 2019

A   A   A

தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான தீவு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது. பாம்புத் தீவு என அழைக்கப்படும் இத்தீவு மனிதர்கள் வாழவும் சென்று வரவும் தடை விதிக்கப்பட்டுள்ள தீவு ஆகும். இங்கு ஒவ்வொரு சதுர மீட்டர் பரப்பளவிற்கும் ஒரு பாம்பு இருப்பதாக கணிக்கப் பட்டுள்ளது. இங்கு மனிதன் வாழ வேண்டுமானால் இங்குள்ள பாம்புகள் அழிக்கப்பட வேண்டும். மனிதனிடம் இருந்து இந்த பாம்புகளை பாதுகாப்பதற்காகவே இங்கு மனிதர்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

4,30,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தீவின் ஒரு பகுதி மழைக்காடுகளையும், இன்னொரு பகுதி பாறைகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இத்தீவில் மிதவெப்ப தட்பவெட்பம் நிலவுகிறது. இங்கு பல பாம்பு வகைகள் காணப்பட்டாலும் கோல்டன் லேன்ஸ்ஹெட் என்ற பாம்பு வகையே அதிகமாக காணப்படுகிறது. இந்த இன பாம்புகள் 2000 முதல் 4000 வரை இங்கு இருக்கலாம் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2015 ஆம் ஆண்டு இங்கு ஆய்வு மேற்கொண்ட டிஸ்கவரி சேனல் இந்த இன பாம்புகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவித்ததை அடுத்து, இது பிரேசில் நாட்டில் அழிந்துவரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு 1909 ஆம் ஆண்டு ஒரு கலங்கரை விளக்கு அமைக்கப்பட்டது. அதை ஒரு குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். 1920 ஆம் ஆண்டு கோல்டன் லேன்ஸ்ஹெட் பாம்பு கடித்ததினால் இறந்த நிலையில் இக்குடும்பத்தினர் கண்டெடுக்கப் பட்டனர். அதன் பின்னரே, அங்கு மனிதர்கள் செல்ல தடை விதிக்கப் பட்டது. தற்போது இத்தீவு பிரேசில் கடற்படையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கலங்கரை விளக்கு சூரிய சக்தியினால் இயங்கும் தானியங்கி விளக்காக மாற்றியமைக்கப் பட்டுள்ளது. இங்கு ஆராய்ச்சிக்காக சிறப்பு அனுமதி பெற்ற சில ஆய்வாளர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர்.

 


2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.