தொடர்புடைய கட்டுரை


இரட்டைத் தேங்காய்

Dr. பா. சாம்ராஜ்

14th Apr 2019

A   A   A

இரட்டைத் தேங்காய் மரம் (கடல் தேங்காய்) என்பது பனைக்குடும்பத்திலுள்ள ஒரு ஒத்த தோற்றமுள்ளத் தாவரமாகும். இது நம் நாட்டு தென்னை மரத்தை விட சற்று வித்தியாசமானதும் அரியதுமாகும். இதன் தாவரவியல் பெயர் லொடொய்சியா மால்டிவிகா (Lodoicea maldivica) என்பதாகும். மேலும் இது அரிகாசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது.

கோகோஸ் நியுசிபெரா என்ற தாவர பெயர் கொண்ட பொதுவான தேங்காய் மரமானது, கிட்டத்தட்ட அனைத்து தீபகற்ப இந்தியாவிலும் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் மற்றும் அதோடு சார்ந்த மலை மற்றும் சமவெளி பிரதேசங்களிலும் காணப்படுகிறது.

இலங்கையில் ராயல் பொட்டானிக்கல் கார்டனில் அமைந்துள்ள ஜார்ஜ் கார்ட்னர் அவர்களின் நினைவுச்சின்னமாக இந்த இரட்டைத் தென்னை மரங்களை விசேஷமாக வளர்த்து பராமரிப்பதை சமீபத்தில் 2017 நவம்பர் கடைசி வாரம் நானும் என்னோடு சேர்ந்த ATWS-SAC குழுவும் பார்வையிட்டு வந்துள்ளோம். இந்த இரட்டை தேங்காய் மரம்   பொதுவாக நம் நாட்டில் வளரும் தேங்காய் போன்றதல்ல. 1743 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரே என்பவரால் செலிசெல்ஸ் ப்ளாஸ்லின் தீவில் உள்ள பள்ளத்தாக்காகிய டி மாயில் என்ற தீவில் இந்த அரிய இரட்டை தேங்காய் மரம் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அது இந்திய பெருங்கடலில் மிதந்துகொண்டிருக்கும் போது 1743 ஆம் ஆண்டு தாவரவியலாளர் ரம்மியஸ் முதன் முதலாக கண்டெடுத்து அதற்கு கோகோ-டி-மெர் என்ற பெயர் சூட்டி 1815 ஆம் ஆண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தினார் என்று ஸ்ரீலங்கா வரலாறு கூறுகிறது.

இதன் தடிபாகம் (தண்டு) 13 மீட்டர் உயரமும், இலைகள் 3 மீட்டர் அல்லது அதற்கு மேல் அதிக நீளமும் கொண்டது.

இதன் பூக்காம்பிற்கு பிளவுபடுத்தாதபடி அடியிலுள்ள இலை தளங்கள் மூலம் பூக்கள் அதை தொடர்ந்து காய்களும் வெளிப்படுகின்றன. ஆண் பூக்கள் 1 மீ நீளமும், பெண் பூக்கள் 5 செ.மீ. அகலமும் கொண்டவை. மிகப்பெரிய காய் 45 செ.மீ நீளம் கொண்டது. பொதுவாக இரண்டாக பிரிந்து ஒன்றோடொன்று ஒட்டின விதைகளை கொண்டிருக்கிறது. இதன் செரட்டையை காய வைத்து அழகுக்காகவும் மற்றும் பல பொருட்கள் வைக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட விதையை கொண்டது. இது முதிர்ச்சியடைவதற்கு 8 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும். இது 30 ஆண்டுகளுக்கு பிறகு தான் முதன் முதலாக பூத்து காய்க்கிறது. 1905 ஆம் ஆண்டில் நினைவு சாலையின் ஒரு பகுதியில் இரட்டை தேங்காய் மரம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அலங்கார மரமாக அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது

இந்த ஆச்சரியமான தேங்காய் மரத்தை பற்றி அறிய விரும்புவோர் கூடுதல் விவரங்களுக்கு மாநில பல்கலைக்கழகங்கள் (State Universities) அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தை (ICAR) அணுகி பெற்று கொள்ளலாம்.

 


2018 செப்டம்பர் மாத அமுதம் இதழில் வெளிவந்தது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.