கால்நடைத் தீவனப்பயிர் சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்
கேப்மல்லிகை மரம் (Cape jasmine)
தேவதாரு போல் காட்சியளிக்கும் “யு” மரம்
கன்னிப்பூவில் பொடி விதைப்பு நெல் சாகுபடி
இந்திய மண்ணில் ஒலிவ எண்ணெய் மரங்கள்
சீமைப்பலா அல்லது ஈரப்பலா மரம்
நொச்சி மரம்
கன்னியாகுமரி ‘உலகின் தோட்டக்கலை கிண்ணம்’
நெட்டிலிங்க மரம்
அருநெல்லி மரம்
மலைக்காடுகளும் கடலோர பகுதிகளும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புற்களின் பங்கு
குமரி மாவட்ட இயற்கை வளப்பாதுகாப்பு
இரட்டைத் தேங்காய்
ஓகி புயலில் தப்பிய அதிசய நாவல் மரம்
கடல்சார் மண்டல ஆராய்ச்சி நிறுவனம்
ஒரு மரத்தின் உண்மை மதிப்பு
தோப்பு மரம்
மாடித்தோட்டம் - 12
04th Oct 2019
தோட்டம் அல்லது தோப்பு என்று தமிழில் பொதுவாக சொல்லப்பட்டுள்ள இம்மரம் கூட்டமாக வளரும் ஒருவகை பசுமை வாய்ந்த குறுமரம் ஆகும். இது ஆங்கிலத்தில் Tamarisk அல்லது Manna tree என்று அழைக்கப்படுகிறது. தண்ணீர் வசதி இல்லாத பாலை மருபூமிகளிலுள்ள வறண்ட உவர் நிலங்களில் தோப்பு போல் கூட்டம் கூட்டமாக வளரும். இம்மரங்கள் இஸ்ரவேல் மற்றும் எகிப்து தேசங்களில் உள்ள பாலை வனங்களில் ஏராளமாக வளர்ந்து நிழல் தருகிறது. மயிலின் இறகுகளைப் போல் உள்ள மரக்கிளைகளும், கடும்பச்சை நிறத்தில் சின்ன மெல்லிய இலைகள் கொண்ட இந்த குறுமரம் நமது கடலோர கிராமங்களில் வளர்ந்து வரும் சவுக்கு தோப்பு போல் காட்சியளிக்கும். இந்த மரம் எப்போதும் பச்சையான இலைகளைக்கொண்டு இளஞ்சிவப்பு, இளமஞ்சள் மற்றும் வெள்ளை நிற உருண்டை பூக்களின் கொத்துக்களோடு பூத்துக் குலுங்குகிறதை காலாகாலங்களில் பார்க்கலாம்.
இது மத்தியதரை நாடுகளில், குறிப்பாக பாலஸ்தீனத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. இது வறட்சியான இடங்களிலும், குன்றுகள், மேடுகள் போன்ற இடங்களின் பள்ளதாக்குகளில் வளருவதால், இதன் நிழலை நாடி அங்கு வசிப்போர், இதன் கீழ் இளைப்பாறச் செல்கிறார்கள். இதன் தாவரப்பெயர் “Tamarix aphylla” என்றும், தாவரகுடும்பம் Tamaricaceae என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
தோப்பு மரம் பசுமையான மரங்களின் வகையாகும். இந்த மரம் ஒன்று முதல் 18 மீட்டர் உயரத்திற்கு, நல்ல அடர்த்தியாக, பரந்து விரிந்து வளரும் மரமாகும். இது காரத்தன்மையுடைய உப்பு மண்ணிலும் நன்கு வளருகிறது. இதன் கிளைகள் மெல்லியதாக, சாம்பல் கலந்த பச்சை நுனி இலைகளைக் கொண்டுள்ளன. இதன் இளமரக்கிளைகளின் அடித்தண்டு வழவழப்பாகவும், சிவப்பு கலந்த தவிட்டு நிறத்திலும் உள்ளது. மரம் ஆண்டுகள் கூடும் போது, இதன் அடித்தண்டு மேடு பள்ளம் நிறைந்த குழிகள் விழுந்து ஆழ்ந்த நீல நிறமாக மாறிவிடுகிறது. இந்த மரத்தின் இலைகள் 1-2 மி.மீ நீளத்தோடு, தண்டுகளினூடே ஒன்றின் மேல் ஒன்றாக பரவி, செதில்களைப் போலக் காணப்படுகிறது. இதில் உப்புநீர், மற்றும் கறை ஊறுவதாக நம்பப்படுகிறது. கிளைகளின் நுனிகளில் 5-10 செ.மீ நீளமுள்ள வெளிர் ரோஜா வண்ண மலர்கள் மார்ச் முதல் செப்டம்பர் வரை கொத்து கொத்தாகப் பூக்கின்றன. குளிர் காலங்களிலும் பூக்கள் பூக்கின்றன.
இதில் பல மரக்கிளைகள் விரிந்து வளர்ந்து, எழில் தரும் பசுமை மரம் போல் காணப்படுவதால். பாலைவனச் சோலை என்றும் அறியப்படுகிறது. இந்த மரம் இஸ்ரவேல் நாட்டில் ஏராளமாக கூட்டம் கூட்டமாக வளர்ந்ததாகவும். இம்மரம் தண்ணீர் பாய்ந்தோடும் சில குன்றுகளிலும், தாழ்வான தண்ணீர் தேங்கும் இடங்களிலும் ஆங்காங்கே செழிப்பாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரமாக வளர்ந்ததாகவும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள மேற்கு ராஜஸ்தான் பாலைவனப் பிரதேசங்களிலும், பெரிய நதிகளான கங்கா, பிரம்மபுத்திரா, யமுனா போன்ற நதி பள்ளத்தாக்குகள் மற்றும் மண் அரிமானம் மிகுதியாக உள்ள மணல்பிரதேசங்களில் இம்மரங்கள் ஆங்காங்கே படர்ந்து வளர்ந்து குறுமரமாகவும், புதர்ச்செடியாகவும், பசுமையாகவும் பூத்து, காய்த்து அழகாக வளர்ந்து நிற்பதை நாம் பார்த்து மகிழலாம். நம் நாட்டில் கடலோரங்களிலுள்ள கிராமங்களில் வளரும் பச்சைநிற சவுக்குத்தோப்புகள் போலவும் இம்மரங்களை ஒப்பிடலாம்.
தோப்பு மரம் விதைகளின் மூலமாகவும், தண்டுகளை மண்ணில் புதைத்து, துளிர்விட செய்தும் பெருகுகின்றது. ஒவ்வொரு மரமும் ஆயிரக் கணக்கான விதைகளை (1மிமீ விட்டம் கொண்ட) உண்டாக்குகின்றது. சின்ன மயிரிழைக் கொண்டைகளைக் கொண்ட தோற்றத்தில் இந்த விதைகள் காணப்படுகின்றன. இது காற்று மூலம் விதைகள் கொண்டு செல்லப்பட உதவுகின்றது. தண்ணீரின் மூலமாகவும் விதைகள் பல இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. பெரும்பாலும், தண்டுகளை வெட்டி நடுதலின் மூலமாகவே தோப்பு மரத்தின் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
தோப்பு மரம் நீளமான ஆணிவேரைக் கொண்டுள்ளதால் ஆழமான நீர் நிலைகளை நாடி, இயற்கையான நீர் ஆதாரங்களைப் பெற்றுக் கொள்கின்றது. இதனால் மற்ற மரங்களுக்குக் கிடைக்க வேண்டிய உப்பு மற்றும் நீர்த்தேவைக்கு தடை ஏற்படுவதில்லை. தோப்பு மரம் உணவுப் பொருள் வழங்கும் மரமாகவும் எண்ணப்படுகிறது. லெபிடொடெரா எனும் இனத்தின் லார்வா புழுக்கள் தோப்பு மரத்தின் இலைகளை உண்பதால், அவைகள் உணவுப் பொருட்களில் பங்கு பெறுகின்றன. இது உப்புகேதுரு (Salt Cedar) என்றும் அழைக்கப்படுகிறது. கிரேக்க புராணத்தில் கிரேக்க தெய்வம் அப்பொல்லோவின் விருப்ப மரமாக தோப்புமரம் உள்ளது.
தோப்பு மரம் காற்றைத் தடுத்து வளரும் அரணாகவும் நிழல்தரும் மரமாகவும் எண்ணப்படுகிறது. இதன் தடி, மரச்சாமான்கள் செய்யவும், விறகாகவும் பயன்படுகிறது. இது உணவுப் பொருள் வழங்கும் வன இனமாகும். எரிபொருள் மற்றும் உரங்கள் உற்பத்தியில் இது பயன்படுகிறது.
பாலைவனப் பிரதேசங்களை செழிப்பாக மாற்றும் செயல்திட்டங்களில் தோப்பு மரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சீனாவின் பாலைவனக்காடுகள் உருவாக்கும் திட்டத்தில் நடைமுறையாக இம்மரம் உள்ளது.
2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது…
கால்நடைத் தீவனப்பயிர் சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்
கேப்மல்லிகை மரம் (Cape jasmine)
தேவதாரு போல் காட்சியளிக்கும் “யு” மரம்
கன்னிப்பூவில் பொடி விதைப்பு நெல் சாகுபடி
இந்திய மண்ணில் ஒலிவ எண்ணெய் மரங்கள்
சீமைப்பலா அல்லது ஈரப்பலா மரம்
நொச்சி மரம்
கன்னியாகுமரி ‘உலகின் தோட்டக்கலை கிண்ணம்’
நெட்டிலிங்க மரம்
அருநெல்லி மரம்
மலைக்காடுகளும் கடலோர பகுதிகளும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புற்களின் பங்கு
குமரி மாவட்ட இயற்கை வளப்பாதுகாப்பு
இரட்டைத் தேங்காய்
ஓகி புயலில் தப்பிய அதிசய நாவல் மரம்
கடல்சார் மண்டல ஆராய்ச்சி நிறுவனம்
ஒரு மரத்தின் உண்மை மதிப்பு
தோப்பு மரம்
மாடித்தோட்டம் - 12
கால்நடைத் தீவனப்பயிர் சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்
எந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்?
கேப்மல்லிகை மரம் (Cape jasmine)
தேவதாரு போல் காட்சியளிக்கும் “யு” மரம்
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு
கன்னிப்பூவில் பொடி விதைப்பு நெல் சாகுபடி
உலக பூமி நாள் விழிப்புணர்வு
இந்திய மண்ணில் ஒலிவ எண்ணெய் மரங்கள்
சீமைப்பலா அல்லது ஈரப்பலா மரம்
உலக பூமி நாள் விழிப்புணர்வு
நொச்சி மரம்
நெட்டிலிங்க மரம்
அருநெல்லி மரம்
கடலோரப் பகுதிகளை காக்க பனைமரம்
மலைக்காடுகளும் கடலோர பகுதிகளும்
இயற்கை சூழலை மீட்போம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புற்களின் பங்கு
குமரி மாவட்ட இயற்கை வளப்பாதுகாப்பு
இரட்டைத் தேங்காய்
ஓகி புயலில் தப்பிய அதிசய நாவல் மரம்
கடல்சார் மண்டல ஆராய்ச்சி நிறுவனம்
ஒரு மரத்தின் உண்மை மதிப்பு
தோப்பு மரம்
நூற்றாண்டு நோக்கி அரிமா சங்கம்.
கால்நடைத் தீவனப்பயிர் சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்
எந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்?
கேப்மல்லிகை மரம் (Cape jasmine)
தேவதாரு போல் காட்சியளிக்கும் “யு” மரம்
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு
கன்னிப்பூவில் பொடி விதைப்பு நெல் சாகுபடி
உலக பூமி நாள் விழிப்புணர்வு
இந்திய மண்ணில் ஒலிவ எண்ணெய் மரங்கள்
சீமைப்பலா அல்லது ஈரப்பலா மரம்
உலக பூமி நாள் விழிப்புணர்வு
நொச்சி மரம்
நெட்டிலிங்க மரம்
அருநெல்லி மரம்
கடலோரப் பகுதிகளை காக்க பனைமரம்
மலைக்காடுகளும் கடலோர பகுதிகளும்
இயற்கை சூழலை மீட்போம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புற்களின் பங்கு
குமரி மாவட்ட இயற்கை வளப்பாதுகாப்பு
இரட்டைத் தேங்காய்
ஓகி புயலில் தப்பிய அதிசய நாவல் மரம்
கடல்சார் மண்டல ஆராய்ச்சி நிறுவனம்
ஒரு மரத்தின் உண்மை மதிப்பு
தோப்பு மரம்
நூற்றாண்டு நோக்கி அரிமா சங்கம்.
Copyright © 2018 Amudam Monthly Magazine