தொடர்புடைய கட்டுரை


அருநெல்லி மரம்

Dr. பா. சாம்ராஜ்

10th Dec 2018

A   A   A

நெல்லி வகையில் பல மரங்கள் உள்ளன. வீட்டுத் தோட்டங்களில் அழகூட்டுவதற்கான சிறு மரமாக அருநெல்லி மரம் (Karee Vembu Tree) விளங்குகிறது. இதன் தாவரவியல் பெயர் கருகா பின்னட்டா (Garuga pinnata). இது பர்சிரெசியே (BURSERACEAE) என்ற தாவர குடும்பத்தை சார்ந்தது. கிராமங்களில் சிறுவர்கள் இந்த மரத்தின் பழங்களை விரும்பி உண்கின்றனர். காய்க்கும் பருவங்களில் மரம் முழுவதும் இலைகளும், கனிகளுமாக நிறைந்திருக்கும். அருநெல்லி மரத்தின் தாயகம் மலாய்த் தீவுகளும் மடகாஸ்கரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் இந்த மரம் பரவியுள்ளது.

அருநெல்லி மரம் இலையுதிர் வகையைச் சேர்ந்தது. உயரம் குறைவானது. 9 மீட்டர் உயரத்திற்கு மேல் இந்த மரம் வளருவதில்லை. இந்த மரத்தின் இலைகள் கூட்டிலை அமைப்புடையது. இந்த மரத்தின் கிளைகளின் அணுக்களில் சிறுசிறு பூங்கொத்துகள் உருவாகிறது. பின்னர் பூங்கொத்துகளிலிருந்து காய்கள் தோன்றுகின்றன. ஆண்டிற்கு இருமுறை இந்த மரம் காய்க்கும் இயல்புடையது. சிற்சில வறண்ட இடங்களில் ஒருமுறை மட்டுமே பலன்தரக்கூடியது. கோடைக் காலங்களில் மரத்தின் இலைகள் முழுவதும் உதிர்ந்து கிளைகள் முழுவதும் காய்களாக அடர்ந்திருக்கும்.

அருநெல்லிக் காய்கள் புளிப்பு சுவையுடையவை. நீர், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், உலோக உப்புக்கள், ஒரு சில அமிலங்கள் உட்பட பல்வேறு சத்துக்கள் அருநெல்லிக் காய்களில் அடங்கியுள்ளன. இந்த மரத்தின் காய்களை சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி உட்கொள்கின்றனர். இந்த காய்களைப் பயன்படுத்தி ஊறுகாய் தயாரிக்கின்றனர். பழச்சாறு தயாரிக்கின்றனர் ஜாம் செய்து உட்கொள்கின்றனர். இந்த மரத்தின் வேர்ப்பட்டையில் 18% டானின் சத்து அடங்கியுள்ளது.

அருநெல்லி மரத்தின் இலை ஒரு வித வியர்வை பெருக்கியாகச் செயல்படுகிறது. இந்த இலையை அரைத்து, மோர் சேர்த்து உட்கொள்ளும்போது, காமாலை நோய் குறைவதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. அருநெல்லி மரத்தின் காய்கள் காய்ச்சலையும், இருமலையும் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், இதனால் பலவகைப் பயன்கள் உள்ளன. இந்தக் காய்களுக்கு பித்த-சமனித்திறன் உள்ளது. நீர் வேட்கை, அழல், உட்சூடு ஆகியவற்றைப் போக்கும் திறன் படைத்தது. இந்த மரத்தின் வேர் காய்ச்சல், சுவை குறைத்தல், வாந்தி போன்ற குறைகளை நீக்குகின்றது. இதனுடைய விதை மலமிளக்கி திறனுடையது. சர்க்கரையுடன் இந்த விதைப்பொடியைக் கலக்கி உட்கொள்ள வியாதி குணமாகும்.

 


ஜனவரி 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.