தாய் சேய் ஆரோக்கியம்

G.A. பிரிட்டோ

22nd Sep 2018

A   A   A

ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அதன் தாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தையை பார்க்கச் செல்லும் நம்மில் எத்தனை பேர் அதன் தாய்க்கு பரிசுகளை வாங்கிச் செல்கிறோம். ஒரு குழந்தையின் தாய்க்கு பழங்கள், சத்தான பாதாம், முந்திரிப்பருப்பு மற்றும் இதர உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லலாம். இவற்றை சாப்பிடுவதன் மூலம் தாய் ஆரோக்கியமாவார், தாய் கொடுக்கும் தாய்ப்பால் மூலம் சத்துக்கள் குழந்தைக்கு கிடைக்கும்.

அதேப்போல் ஒரு குழந்தையை பார்க்கச் செல்லும்போது அந்த குழந்தைக்கும், தாய்க்கும் பிரச்சனை ஏற்படாத வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். ஒரு பிறந்த குழந்தையை பார்க்கச் செல்லும்போது என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை கீழே பார்ப்போம்.

குழந்தை பிறந்து 24 மணி நேரம் கழிந்த பிறகு பார்க்கச் செல்வது நல்லது. இதனால், தாய்க்கும் சேய்க்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். குழந்தைக்கு, தாயார் பால் கொடுக்கும் நேரமாக இருந்தால், சிறிது நேரம் வெளியே காத்திருந்த பின் குழந்தையைப் பார்க்கச் செல்ல வேண்டும். 15 நிமிடத்துக்குள் குழந்தையைப் பார்த்துவிட்டு, வெளியில் வந்து விடுங்கள். நீண்ட நேரம் இருப்பது, குழந்தைக்கும் தாய்க்கும் அசௌகர்யத்தை ஏற்படுத்தும்.

உடல்நிலை சரியில்லாத போது குழந்தையை பார்க்கச் செல்லாதீர்கள். அதிலும் குறிப்பாக சளி, இருமல், தும்மல், காய்ச்சல் போன்றவை இருந்தால் குழந்தையை பார்க்க செல்லவே செல்லாதீர்கள். மேலும் குழந்தையை பார்க்கச் செல்லும்போது சென்ட், பெர்ஃப்யூம், மது போன்றவற்றை உபயோகிக்காதீர்கள்.

குழந்தையை அழுத்தி தூக்குவது, ஆசையாக கிள்ளுவது, முத்தமிடுவது போன்றவற்றை செய்யாதீர்கள். குழந்தையும் தாயும் இருக்கும் அறையில் இருந்துகொண்டு சத்தமாக பேசுவது, அரட்டை அடிப்பதும் இருவருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும், எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

மேலும் மருத்துவர்களின் பரிந்துரை ஏதாவது இருப்பின் கண்டிப்பாக பின்பற்றுங்கள்.

 


மே 2017 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.