எல்லாம் மனதாலே...

Dr. பா. நாகராஜன்

19th Jan 2019

A   A   A

சராசரி மனிதன் பஞ்சபூதங்களால் உருவானவன் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

இப்பிரபஞ்சம், உலகம் மற்றும் அதிலுள்ள கிரகங்கள் அனைத்துமே இவற்றால் ஆனதுதான். அடிப்படை இரசாயனப் பொருட்கள், விதவிதமான மாற்றங்களால் வெவ்வேறு பரிணாமங்களில் வெவ்வேறு பொருள்களாகவும், வெவ்வேறு உயிரினங்களாகவும் உருவாகின்றன. உயிரினங்கள் அனைத்திற்குமே உயிர், உடல், ஆன்மா என மூன்று பரிமாணங்களாக இருக்கக் கூடும். இதில் ஆறறிவு பெற்ற மனிதன் மனதால் உயர்ந்தவன் ஆகிறான். மனம் என்பது அருவமாக இருப்பினும் அதுவும் இரசாயன மற்றும் பௌதீக கலவைகளாலேயே செயல்படுகிறது. மூளையில் உருவாகும் இரசாயனங்கள் நமது செயல்பாடுகளை கணிக்கிறது என்று எடுத்துக்கொண்டால் இறுதியாக மனமே நம் செயல்பாடுகள் அனைத்திற்கும் எஜமானனாக செயல்படுகிறது.

நம் உடலில் சிறிய இரசாயன மாற்றங்கள் கூட மிக வினோதமான, வித்தியாசமான செயல்பாடுகளை ஏற்படுத்தக்கூடும். சாதாரண குடிக்கும் நீரில், டீ, காப்பி மற்றும் அவை எல்லாம் கூட உடல் மூளை மற்றும் மனமாறுதல்கள் ஏற்படும் இவற்றிற்கே இப்படியென்றால் மது வகைகள், புகைபிடித்தல் இவையனைத்துமே இரசாயன சேர்க்கையால் மனிதனை வேறு பரிணாமங்களில் காட்டுகின்றன. அதுவும் பீர், வைன் போன்ற சாதாரண மது வகைகளுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.

இவற்றிற்கு மேலாக கஞ்சா, ஓபியம் வேறு சில பசைவகைகள் இதே போன்று வித்தியாசமான செயல்பாடுகளை உபயோகிக்கும் மனிதனுள் உருவாக்கி விடுகின்றன. ஒரு முறை கொடைக்கானல் சென்றிருந்தோம். அங்கு ஒரு தாவர ஆராய்ச்சி நிலையத்தில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. அதன் பெயர் “ஃபெயரி ஃபால்ஸ்” நீர்வீழ்ச்சி என்னவோ குறைவாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இடம் அழகு கொஞ்சும் இடமாக இருந்தது. நீர்வீழ்ச்சிக்கு முன்பாக மக்கள் நின்று ரசிக்கும் வண்ணம் வட்ட வடிவத்தில் உருவான தளம் அழகாகப் போடப்பட்டிருந்தது. அதைச்சுற்றி வரும்பொழுது இரண்டு அயல்நாட்டுக்காரர்கள் கீழே அமர்ந்து ரொட்டித் துண்டுகளும் ஆம்லெட்டுமாக மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அச்சமயம் ஒரு வருடத்திற்கு முன்பு கொடைக்கானலில் இருந்து ஆறேழு கிலோ மீட்டர் தொலைவில் வட்டக்காணல் எனும் ஊரில் உள்ள ரிசார்ட்களில் போதைக்காளான் கலந்த ஆம்லெட்கள் கிடைக்கும் என தமிழ்இந்து நாளிதழில் படித்த நினைவு எனக்கு வந்தது. அந்த போதைக்காளான்கள் கலந்த ஒரு ஆம்லெட்டின் விலை 700 முதல் 1200 ரூபாய் வரை இருக்கக்கூடும் என எழுதப்பட்டிருந்தது.

கொடைக்கானலில் வட்டக்காணல் எனும் அந்த ஏரியாக்களில் மாத்திரம் அவ்வகையான போதைக் காளான்கள் கிடைப்பதாக தெரிகிறது. இவற்றிற்காகவே வெளிநாடுகளில் இருந்து அதுவும் இஸ்ரேல் மற்றும் வேறு சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் நிறைய பயணிகள் வருவதாகத் தெரிகிறது. இதனாலேயே ஐஎஸ் தீவிரவாதிகள்கூட அந்த பகுதியில் இஸ்ரேலியர்களை கொல்வதற்காக வட்டமிடுவார்கள் என செய்திகளின் வாயிலாக அறிந்தேன். எவ்வளவோ தூரத்தில் இருந்து உயிரை பணயம் வைத்து வெகுதூரம் பயணித்து வித்தியாசமான அனுபவங்களுக்கு மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். எங்களுடன் வந்த நண்பர்களுள் ஒருவர் சிறிது மதுபானம் அருந்துவார். அவர் மதுபானக் கடையை தேடி கொடைக்கானல் முழுவதும் அலைந்ததை நாங்கள் பார்த்தோம். மது அருந்தாமல் இருந்தால் அவரால் உறங்க முடியாது எனக்கூறி அலைந்து திரிந்து வாங்கி வந்தார். ஒரு மனிதனை எப்படியெல்லாம் அலைந்து திரிய வைக்கிறது இந்த ரசாயனங்கள்.

வாலிப பருவத்தில் காதலுக்கேன்ற இரசாயனங்களும் வெறுப்பு, விருப்பு என ஏற்படும்பொழுது உருவாகும் இரசாயனங்களும் பக்தி மார்க்கமாக செல்லும் பொழுது நம்முள் ஏற்படும் இரசாயன மாற்றங்களும் அனைத்துமே நினைத்துப் பார்த்தால் வினோதமாகவே இருக்கிறது. மூளையில் ஹொப்போடோலமி என்னும் பகுதியில் நாம் திருப்தி அடைவதற்கென சில பகுதியில் இந்த இரசாயனங்கள் வேலை செய்கின்றன. மீண்டும் மீண்டும் எந்த ஒரு செயலில் நமக்கு திருப்தி ஏற்படுகிறதோ அந்த செயல்பாட்டிற்கென அந்தந்த பகுதிகள் உருவாகி குறிப்பிட்ட செயல்கள் அதாவது உடல் இயக்கங்கள், குறிப்பிட்ட இரசாயன மாற்றங்கள் அதாவது இரசாயன செயல்பாடுகளால் திருப்தி அடையக்கூடிய பகுதிகள் சமாதானம் அடைகின்றன. சந்தோஷம் அடைகின்றன. உண்மையில் இப்படி அனைத்து காரியங்களுமே பிரச்சனையை நோக்கியே நகர்கின்றன. அதனால்தான் நம் எண்ணம் சொல்லாகிறது. சொல் செயலாகிறது. செயல் பழக்கமாகிறது. அத்தகைய பழக்க வழக்கங்களே ஒரு நபரின் ஆளுமையை உருவாக்குகின்றன.

எனவேதான் கஞ்சா, மது, புகைபிடித்தல் மற்றும் சில மாத்திரைகள் வாயிலாக திருப்தியும் சந்தோஷமும் அடைவோர் அப்பழக்க வழக்கங்களை விடுத்து வெளியே வர இயலாது போகின்றன. இப்பொழுதெல்லாம் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கஞ்சா போன்றவைகளை உபயோகிப்பது அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக இப்பழக்கத்தை விட நினைக்கும் அல்லது முயற்சிக்கும் நபர்களை அக்கூட்டத்தை சார்ந்தோர் அனுமதிக்க மாட்டார்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குறிப்பிட்ட நேரத்தில் வரும்படியாக கூறி, அவர்கள் பேச்சில், நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் அதை கவனித்து, கண்டுபிடித்து அவர்களுக்குத் தெரியாமலே கூட தக்க மருந்துகள் கொடுத்து குணப்படுத்த முடியும்.

 


பெப்ரவரி 2018 அமுதம் இதழில் வெளியானது...

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.