ஆயுர்வேதம் கூறும் புற்றுநோய் சிகிச்சை முறை

சிதம்பரம் ரவிச்சந்திரன்

19th Jun 2018

A   A   A

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் புற்றுநோய், இதயநோய், சர்க்கரைநோய் என்பதெல்லாம் சர்வசாதாரணமாக ஆகிவிட்டன. ஆனால் நம் பாரம்பரிய இந்திய மருத்துவமுறைகளில் பழமையானதும், புகழ்பெற்றதுமான ஆயுர்வேதம் புற்றுநோய் பற்றியும், அதை வராமல் தடுக்கும் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக எடுத்துகூறியுள்ளது

பீதியை உருவாக்கும் விதத்தில், இன்று பரவலாக மக்களிடம் காணப்படும் ஒரு நோய்தான் புற்றுநோய் ஆகும்ஆயுர்வேத நூல்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ள ‘அற்புதம்’ என்ற நோயும், நவீன மருத்துவம் கூறும் புற்றுநோயும் ஒன்றே என்று கருதப்படுகிறது. நவீன வாழ்க்கை முறை மாற்றங்களும், உணவு பழக்கவழக்கங்களும் சரிசமமாக புற்றுநோய் வருவதற்கு காரணமாக மருத்துவ அறிஞர்கள் கருதுகிறார்கள். இதனால்தான் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கிற வழிமுறைகள் பற்றி விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நம் சமூகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த நோயை பற்றி ஆயுர்வேத நூல்களில் படிக்கும் ஒரு ஆராய்ச்சியாளரால் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். ஆயுர்வேத மருத்துவத்தில் பேரறிஞர்களாக கருதப்படுபவர்கள் இந்த நோய்க்கு அளித்துள்ள முக்கியதுவம் நோய் வந்தபின் சரிப்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்படாமல், நோய் வருவதற்கு முன்பாகவே அதை தடுத்து நிறுத்துவதற்கான எதிர்ப்பாற்றலை வளர்ப்பதில்தான் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது தெரியவரும்

மனித உடலில் நோய் கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட அதை முழுமையாக குணப்படுத்த முடியாத அளவுக்கு அந்த நோய் பெரிதாக பரவியிருக்கும். அதனால் நோய் வராமல் நம்மை நாம் காத்து கொள்வதுதான் மிக அவசியமான காரியம் ஆகும்வாழ்க்கை முறையில் நாம் கொண்டுவந்துள்ள மாற்றங்களும், நாம் இன்று உணவாக எடுத்துகொள்ளும் உணவுகளாலும்தான் பல நோய்களும் நம்மால் சரியாக்கமுடியாத அளவுக்கு வாழ்க்கை முழுவதும் மாத்திரைகளுடன் கழிக்கவேண்டிய அவலநிலைக்கு நம்மை ஆளாக்கிவிடுகின்றன

முடிந்தவரை சைவ உணவு உண்பவராக இருப்பது நல்லது. விஷம் இல்லாத காய்களையும், பழங்களையும் தேர்ந்தெடுத்து உட்கொள்ளவேண்டும். எண்னையில் பொரித்த அல்லது வறுத்த வகை உணவுகளை கூடியமட்டும் குறைத்துகொள்ள வேண்டும். சமையலுக்கு ஒரு தடவை பயன்படுத்திய எண்னையை மறுபடியும் பயன்படுத்தாமல் இருக்க பழகிகொள்ளவேண்டும். ஒரு முறை சமைத்த உணவை பாதுகாத்து வைத்திருந்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்தி கொள்ளவேண்டும்

நம்மிடையே இன்று பெயர் பெற்றிருக்கும் புதிய புதிய வகை உணவுகளை அவை நன்மை தருவதாக இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தே சாப்பிடவேண்டும்அவற்றில் பலவும் நம் உடலுக்கும், மனதுக்கும் கேடு தருவதாக இருக்கலாம்விளம்பரங்கள் சொல்லும் விஷயங்களை உண்மை என்று அப்படியே நம்பி அவற்றை வழக்கமாக சாப்பிடுவது நமக்கு நாமே தீங்கை வரவழைத்துகொள்வதற்கு ஒப்பானதாகும்நல்லது என்று சொல்லப்பட்டாலும் புதிய நவநாகரீக உணவுகளில் பலவும் நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை நாளடைவில் குறைக்கும் ஒன்றாக மாறிவிடுகின்றனஅத்தகையவை நமக்கு கேடு தராதவையா என்று அறிந்துகொண்ட பிறகே அவற்றை நாம் பயன்படுத்தவேண்டும்நாம் கடைபிடித்து வரும் பலவகையான அன்றாட பழக்கவழக்கங்களும் அவை சரியா, தவறா என்று பகுத்துணர்ந்து அறிந்துகொண்ட பிறகே அவற்றை நாம் அன்றாடம் தவறாமல் கடைபிடிக்க தொடங்கவேண்டும். நல்ல உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும். புற்றுநோய் போன்ற மாபெரும் வாழ்வின் விபத்துகளை நல்ல பழக்க வழக்கங்களை நாம் நம் அன்றாடவாழ்வில் கடைபிடிப்பதன் மூலம் ஓரளவுக்கு குறைத்து கொள்ளலாம்.  

நல்ல காற்று, நல்ல வெளிச்சம், நல்ல குடிநீர், நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள், நல்ல சொல்கள், பசுமையான சூழ்நிலை என்று இருக்கும்போது நாம் உண்ணும் உணவும் நல்லதாக அமைந்துவிட்டால் புற்றுநோய் போன்ற நோய்களை வராமல் வாழும் காலம் வரையும் ஆரோக்கியமான வாழ்வை நாம் வாழலாம்.

 


டிசம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது. . .

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.