தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை - 25

F. பிரைட் ஜானி

08th Dec 2018

A   A   A

திரைப்படக் காட்சிகளை படம்பிடிக்க திரைப்படக் கேமரா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. திரைப்படத்திற்கு எந்த கேமராவை பயன்படுத்த வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர் அல்லது ஒளிப்பதிவாளர் தேர்வு செய்கின்றார். திரைப்படத்தின் கதைக்கு ஏற்ற கேமரா தேர்வு செய்யப்படுகிறது. திரைப்படக் காட்சிகளை படம்பிடிக்க பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான சிறந்த டிஜிட்டல் கேமராக்கள் Arri Alexa, Blackmagic Design Cinema Camera, Canon Cinema EOS, Panavision Genesis, Red Epic, Red Scarlet, ரெட் ஒன் மற்றும் சோனி சினிஅல்டா போன்ற கேமராக்கள் தற்பொழுது பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற டிஜிட்டல் கேமராக்கள் திரைப்படங்களின் தரத்தை டிஜிட்டல் முறையில் உயர்த்துகின்றன.

ARRI Alex ஜெர்மனியைச் சார்ந்த மோஷன் பிக்சர் உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது 1917-ஆம் ஆண்டு ஆகஸ்ட் அர்னால்ட் மற்றும் ராபர்ட் ரிச்டெர் போன்றவர்களால் உருவானது. இதன் முதல் மூவி கேமரா 1924-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் சிறந்த மூவி கேமரா வடிவமைப்பாளர் எரிக் காஸ்ட்னர் உலகின் முதல் நிர்பந்தமான கண்ணாடியில் ஷட்டரை முதன்முதலாக Arriflex 35 என்ற கேமராவில் பயன்படுத்தினார். இந்த நிறுவனத்தின் சிறந்த கேமராக்கள் Alexa, Alexa Plus, Alexa SXT, Alexa Mini, Alexa Plus 4:3, Alexa 65, Alexa XT, Alexa Studio மற்றும் Alexa M போன்றவையாகும். இந்த கேமராகளின் மூலம் Time, 21 Jump Street, Skyfall, Rock of Ages மற்றும் Abraham Lincoln: Vampire Hunter போன்ற திரைப்படங்கள் படம்பிடிக்கப்பட்டன. ARRI கேமரா மற்றும் View Finder -இன் ஆரம்ப விலை 39,999 டாலரிலிருந்து தொடங்குகிறது.

The Red Epic Camera - வானது தி ரெட் டிஜிட்டல் சினிமா கேமரா கம்பெனி கலிபோர்னியாவைச் சார்ந்தது ஆகும். இந்த நிறுவனமானது 2005-ஆம் ஆண்டு ஜிம் ஜன்னார்ட் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் முதல் கேமரா ரெட் ஒன் மற்றும் இந்த நிறுவனத்தின் சமீபத்திய கேமரா ரெட் எபிக் கேமரா ஆகும். ரெட் எபிக் கேமராவானது 19 மெகாபிக்சல் ரெட் டிராகன் சென்சார், 1920 மற்றும் 1080 ஹை டெபினிஷன் ரிசோலியுஷன் கொண்ட மிகவும் மலிவான விலையில் கனமற்றதாக தயாரிக்கப்பட்ட கேமராவாகும். இந்த கேமராவானது District 9, Book of Eli, Social Network, The Hobbit: An Unexpected Journey மற்றும் War House போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டன. ரெட் எபிக் கேமராவின் ஆரம்ப விலை 25,000 டாலரிலிருந்து தொடங்குகிறது.

 The Red Scarlet Camera – வானது தி ரெட் டிஜிட்டல் சினிமா நிறுவனத்தின் கேமராக்களைவிட மாறுபட்ட கேமராவாகும். ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்கள் The Red Scarlet கேமராவைத் திரைப்பட படப்பிடிப்பிற்கு பயன்படுத்தியிருக்கின்றன. இந்த கேமராவானது En Solitaire, The Expendables 3, The Raid 2: Berandal, Drinking Buddies மற்றும் கோஸ்ட்லைட் போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டன. இந்த கேமராவின் ஆரம்ப விலை 9,700 டாலரிலிருந்து தொடங்குகிறது.

சோனி நிறுவனமானது ஐப்பான் நாட்டைச் சார்ந்த மின்னணு உபகரணங்கள் நிறுவனங்கள் உற்பத்தியில் மிகவும் பிரபலமான நிறுவனமாகும். சோனி நிறுவனத்தின் உயர்தர திரைப்பட தொழில்நுட்ப கேமராக்கள் எஃப்.எஸ்7, எஃப்5, எஃப்3, எஃப்55 மற்றும் எஃப்65 போன்றவையாகும். இந்த கேமராக்கள் வரிசையில் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் எஃப்.எஸ்7, எஃப்5, எஃப்3, எஃப்55, எஃப்3 மற்றும் எஃப்65 போன்ற கேமராக்களையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த கேமரவானது மங்கி கிங்டம், எக்ஸ் மசினா, பிரீச்சர், கேஃப் சொசைட்டி மற்றும் பிளாக்லிஸ்ட் போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டன. எஃப்65 கேமராவின் விலை 65,000 டாலர் மற்றும் எஃப்55 கேமராவின் விலை 28,990 டாலர் மற்றும் எஃப்3 கேமராவின் விலை 13,960 டாலர் ஆகும்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சோனி, ARRI மற்றும் ரெட் கேமராக்களையே மிகவும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதற்கு அடுத்ததாக கொபுரோ நிறுவனத்தின் கேமராவே பயன்படுத்தப்படுகிறது. கொபுரோ நிறுவனமானது 2002-ஆம் ஆண்டு நிக் உட்மேன் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த கேமராக்கள் compactable size options, எதிர்ப்பு அதிர்ச்சி மற்றும் வாட்டர்புரூப் கேசிங் ஸ்ட்ரக்சர் அமைப்பில் வடிவமைக்கப்பட்டதாகும். இது கொரில்லா திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பிடித்த கேமராவாகும். மிகவும் பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான Furious 7 இந்த கேமராவின் மூலம் படம்பிடிக்கப்பட்டது. இந்த கேமராவின் ஆரம்ப விலை 499.99 டாலர் ஆகும்.

 


ஜனவரி 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.