தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை - 44

F. பிரைட் ஜானி

04th Apr 2019

A   A   A

அனிமேஷன் மற்றும் காட்சி விளைவுகள் துறையானது உலக அளவில் அதிநவீன வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மிகப்பிரம்மாண்டமான திரைப்படங்கள் தற்போது ஹாலிவுட்டிலே மிக அதிகமாக தயாரிக்கப்படுகிறது. இதற்காக பலவிதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மோஷன் காப்ச்சர் என்ற தொழில்நுட்பமானது ஹாலிவுட்டில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். மோஷன் காப்ச்சர் ஆனது Mocap எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு நபரின் அனைத்து விதமான அசைவு மற்றும் உணர்ச்சியை கணினியில் பதிவுசெய்து கணினியில் உருவாக்கப்பட்டிருக்கும் நபருக்கோ அல்லது பொருள்களுக்கோ மாற்றும் முறையாகும். இந்த தொழில்நுட்பமானது அவதார், பைரேட்ஸ் ஆப் கரீபியன், தி போலார் எக்ஸ்பிரஸ், கார் மற்றும் கோச்சடையான் போன்ற பல திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரண திரைப்படங்களைக் காட்டிலும் மோஷன் காப்ச்சர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தித் தயாரிக்கப்படும் திரைப்படங்களை உருவாக்க அதிக காலம், செலவு மற்றும் நேரம் தேவைப்படுகிறது. இதற்காக திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் உதவியுடன் காட்சி விளைவுகள் நிறுவனங்களும் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றன. இந்த தொழில்நுட்பமானது வீடியோ விளையாட்டுகள், ராணுவம், விளையாட்டுகள் மற்றும் மருத்துவம் இவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒவ்வொரு நபரின் முகபாவனை உணர்ச்சிகளை படம்பிடிக்க சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் எந்தவொரு நபரின் உருவத்தையும் கணினியில் உருவாக்கி அவற்றிற்கு கணினியின் உதவியுடன் திரையில் காண்பிக்க முடியும். தற்போது திரையிடப்படும் பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்கள் .இந்தத் தொழில்நுட்பத்திலே தயாரிக்கப்படுகின்றன.

படப்பிடிப்பு தளங்களில் மிக துல்லியமாக கணக்கிட கேமராக்கள் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இதற்கென Vicon, Xsens, ARK மற்றும் பல நிறுவனங்கள் திரைப்படங்களில் சிறப்பாக மோஷன் காப்ச்சர் -யை பயன்படுத்த உதவுகின்றன. இவற்றின் உதவியுடன் ஒரு சிறிய அறையிலேயே படப்பிடிப்பை முழுவதும் முடித்துவிட்டு திரைப்படத்தில் மிகபிரம்மாண்ட காட்சிகளாக காண்பிக்க முடியும். அதே நேரத்தில் சிறப்பாக காட்சி விளைவுகளை உருவாக்க நிறுவனங்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேவைப்படுகிறது. மேலும், இவற்றில் எந்தவிதமான பிரம்மாண்டமான காட்சிகளையும் காண்பிக்க முடியும். படப்பிடிப்பு தளத்தில் இந்த படப்பிடிப்பிற்கெனவே உள்ள உடையை அணிந்தே படப்பிடிப்பு செய்யப்படுகிறது. படப்பிடிப்பின்போது அனைவரும் கற்பனையிலேயே அனைத்து காட்சிகளையும் நடிக்க வேண்டும். இந்த காட்சிகள் கணினிக்கு மாற்றப்பட்டபிறகே அனைத்துவிதமான காட்சிகளையும் பார்க்க முடியும்.

கணினி விளையாட்டு துறையில் 1994-ஆம் ஆண்டு முதல் இந்த தொழில்நுட்பமானது பயன்படுத்தப்படுகிறது. இவை Virtua Fighter 2, Soul Edge மற்றும் பலவற்றில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பமானது தி மம்மி, கிங்காங், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன், அவதார், அவன்சர்ஸ், ட்ரோன் லெகசி, தி ஹாபிட், பைனல் பான்டசி, தி லார்ட் ஆப் தி ரிங்ஸ் மற்றும் பல திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அனிமேஷன் திரைப்படங்களான மான்ஸ்டர் ஹவுஸ், ஹேப்பி ஃபீட், கார்ஸ், Ratatouille, தி போலார் எக்ஸ்பிரஸ் இதுபோன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி தொடர்களான Laflaque, Sprookjesboom, Cafe de Wereld, Headcases மற்றும் பலவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எபிக் கேஎம்ஸ் நிறுவமானது ஃஹெல்பிளேட் வீடியோவிலும் இந்த தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர். இந்த தொழில்நுட்பத்திற்கென சிறப்பாக மென்பொருட்களும் காணப்படுகின்றன. விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகுமென்ஃடா ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் உதவியால் மோஷன் காப்ச்சர் ஆனது டிஜிட்டல் முறையில் அபரிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. திரைப்படத் தொழில்நுட்ப வளர்ச்சியில் மோஷன் காப்ச்சர் மற்றும் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள் மிக அதிகமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பல நிறுவனங்கள் இவற்றைப் பற்றிய ஆய்விலும் ஈடுபட்டிருக்கின்றன. இவற்றைப்பற்றி கற்றுக்கொடுக்க நிறுவனங்களும் தற்போது காணப்படுகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் திரைப்படத்துறையிலேயே மாற்றத்தை ஏற்படுத்திய தொழில்நுட்பங்களாக காணப்படுகிறது.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


ஆகஸ்ட் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.