தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை – 39

F. பிரைட் ஜானி

26th Jul 2018

A   A   A

ஹாலிவுட் திரைப்படங்கள், அனைத்து திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் மிகவும் சிறந்ததாக காணப்படுகிறது. இந்த திரைப்படங்களின் தயாரிப்பு மற்றும் இதன் செலவு முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுகிறது. மேலும், மிகவும் பழமைவாய்ந்த திரைப்படத்துறையாகவும் மற்றும் திரைப்படங்களில் காட்சி விளைவுகள் அதிகமாக பயன்படுத்தும் துறையாகவும் காணப்படுகிறது. சிறந்த தொழில்நுட்ப திரைப்படங்களாக Sorry 2001: A Space Odyssey, Tron, The Truman Show, The Matrix போன்றத் திரைப்படங்களாக காணப்படுகிறது. பார்வையாளர்களுக்கும் இத்திரைப்படங்கள் மிக பிரம்மிப்பை உருவாக்குகின்றன.

Tron திரைப்படமானது 1982-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. கணினியின் உதவியுடன் motion picture காட்சிகளை மிகச் சிறப்பாக பயன்படுத்திய திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படமானது Tron Legacy என்ற பெயரில் டிசம்பர் 2010-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தின் 3D காட்சி விளைவுகள் மற்றும் மிகச்சிறப்பாக அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இத்திரைப்படத்தின் சிறப்பு அம்சம் Special Effects - யை சிறப்பாக பயன்படுத்தியதாகும்.

Iron Man திரைப்படத் தொழில்நுட்பங்களில் தயாரிக்கப்பட்ட மற்றுமொரு சிறந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் Hologram மிகவும் அதிகமான காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். மேலும், இதனைப் போலவே Batman, Spiderman, X-men மற்றும் Superman போன்ற திரைப்படங்களைப் போலவே காணப்பட்டாலும் முற்றிலும் மாறுபட்ட சூப்பர் ஹீரோக்கள் திரைப்படமாகக் காணப்படுகிறது. இது போன்ற திரைப்படங்கள் தயாரிக்க மிக அதிக காலம் தேவைப்படுகிறது. மேலும் அதிநவீன கேமராக்கள் மற்றும் காட்சி விளைவுகளும் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

Inception திரைப்படமானது மற்றுமொரு சிறந்த காட்சி விளைவுகள் மற்றும் தொழில்நுட்பத் திரைப்படங்களுக்கு எடுத்துக்காட்டாகும். இத்திரைப்படமானது மிகச்சிறந்த அறிவியல் ரீதியான தொழில்நுட்பத் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் காட்சி விளைவுகள் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. The Social Network திரைப்படமும் கணினியின் தொழில்நுட்பம் மற்றும் facebook அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டத் திரைப்படமாகும். இதனைப் போன்றே Net மற்றும் Hackers திரைப்படங்களும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படமானது National Board of Review - இல் சிறந்ததொரு திரைப்படமாகக் காணப்பட்டது.

Wall-E சிறந்ததொரு animation திரைப்படமாகவும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்ததாகக் காணப்படுகிறது. இத்திரைப்படத்தில் தொழில்நுட்பங்கள் மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டு இருந்தது. இத்திரைப்படத்தை பிக்சார் நிறுவனமானது தயாரித்தது. Collapsus திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட கதையைக்கொண்ட திரைப்படமாகக் காணப்படுகிறது. இத்திரைப்படத்தில் பலவிதமான புதுமையான தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டன. மைனாரிட்டி ரிப்போர்ட் அதிநவீன மோஷன் கிராபிக்ஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். கணினி தொழில்நுட்ப உதவியுடன் மிகச்சிறந்த அதிநவீன உலகத்தை இத்திரைப்படத்தில் காண முடியும். இத்திரைப்படத்தில் மிகச்சிறப்பாக டிசைனிங் மற்றும் interfaces பயன்படுத்தப்பட்டு இருந்தது.

2001 ல் A Space Odyssey என்ற திரைப்படமானது சிறந்ததொரு தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சார்ந்த திரைப்படமாகக் காணப்படுகிறது. இத்திரைப்படத்தில் computer HAL ஐ சிறப்பாக பயன்படுத்தி 1968-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இத்திரைப்படமானது தயாரிக்க மிக அதிகமான காலம் தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்கள் அதிகமாக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. மேலும், திரைப்படங்களிலே மிகச்சிறந்த அதிநவீன தொழில்நுட்ப திரைப்படமாக அவதார் திரைப்படமானது காணப்படுகிறது. 3D மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தை மிகச்சிறப்பாக பயன்படுத்திய திரைப்படமாக காணப்படுகிறது. இத்திரைப்படத்திற்கென சிறப்பாக கேமராக்கள் தயாரிக்கப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டன. இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் மிகச்சிறப்பாக தொழில்நுட்ப முறையில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஸ்டார் வார் போன்ற மிகச்சிறந்த பிரம்மாண்ட திரைப்படமாக அவதார் திரைப்படமானது காணப்படுகிறது. ஹாலிவுட்டில் திரைப்படங்கள் பொதுவாக மிகவும் பிரம்மாண்டமானதாகக் காணப்படுகிறது.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


மார்ச் 2018 அமுதம் இதழில் வெளியானது.

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.