தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை - 33

F. பிரைட் ஜானி

16th Aug 2018

A   A   A

திரைப்பட உருவாக்கத்தில் தயாரிப்பு மிக முக்கிய பகுதியாகக் காணப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தொகுப்பு/இடம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. படப்பிடிப்பிற்கு முதலில் அதன் தயாரிப்பிற்காக குழு உறுப்பினர்கள் அதற்கான வேலைகளைச் செய்வார்கள். நடிகர் மற்றும் நடிகைககள் அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு இடங்களுக்கு வருவார்கள். படப்பிடிப்பில் கட்டிட அமைப்புகள், உடைகள் மற்றும் ஒளி அமைப்புகள் போன்ற தயாரிப்புகள் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். மின்சார மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு குழுக்கள் பொதுவாக கேமரா மற்றும் ஒலித்துறையின் முன்னோடியாகும். ஒரு காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கும்போது இவர்கள் அடுத்த காட்சிக்கான படப்பிடிப்பு தயாரிப்புகளையும் மேற்கொள்வார்கள்.

திரைப்பட குழுவினர் படப்பிடிப்பிற்கு ஏற்ற கருவிகளையும் ஆயத்தம் செய்கிறார்கள். நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு உடை அலங்காரம் மற்றும் முடி அலங்காரமும் செய்யப்படுகிறது. படப்பிடிப்பிற்கு ஆயத்தமாக முதலில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பிறகு கதையின் ஸ்கிரிப்பிட்டிற்கு ஏற்றவாறு இயக்குனர் உதவியுடன் ஒத்திகைப் பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு கேமராமேன் மற்றும் குழு உறுப்பினர்கள் ஒத்துழைக்கிறார்கள். இதன்பிறகு, மாற்றங்கள் செய்யப்பட்டபிறகு இறுதிக் காட்சிகள் இயக்குனர் விரும்பும்படி அனைவரின் ஒத்துழைப்புடன் படமாக்கப்படுகிறது.

படப்பிடிப்புக் காட்சிகளுக்கு மேலும் உதவியாக உதவி இயக்குநர்களும் உதவி செய்கிறார்கள். படக்காட்சிகள் எப்பொழுது தொடங்க வேண்டும் மற்றும் எப்பொழுது முடிக்க வேண்டும் என இதற்காக உதவி இயக்குநர் உதவி செய்கிறார். மேலும், அனைத்து வகையான படப்பிடிப்புக் காட்சிகளுக்கு தேவையான உபகரணங்கள் ஆயத்தம் செய்யவும் மற்றும் அதனை கண்காணிக்கவும் உதவி இயக்குநர் துணை செய்கிறார். கேமரா ஆபரேட்டர் எப்பொழுது எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதிலும் உதவி இயக்குநர் உதவி செய்கிறார். கேமரா ஆபரேட்டருடன் ஒரு குழுவும் படப்பிடிப்பிற்காக இயங்குகிறது. ஒவ்வொரு காட்சிகளும் இயக்குநர் இறுதி செய்யும்வரை படப்பிடிப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. ஸ்கிரிப்ட் மேற்பார்வையாளர் ஒரு காட்சி மற்றும் அடுத்த காட்சிகளின் தொடர்ச்சியை கண்காணிக்கிறார். மேலும் மீண்டும் தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யப்பட்டு படமாக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

படக்காட்சிகள் எடுக்கும்போது மீண்டும் எடுக்கப்படுவது தேவை என இயக்குநர் விரும்பினால் படக்காட்சிகள் மீண்டும் அனைத்து குழுக்களின் உதவியுடன் படமாக்கப்பட்டு காண்பிக்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு காட்சிகளும் இயக்குநருக்கு காண்பிக்கப்பட்டு உறுதி செய்தபிறகு உதவி இயக்குநர் அடுத்த காட்சிக்கான ஆயத்தப் பணிகளை செய்வார். ஒவ்வொரு நாளின் படப்பிடிப்பு காட்சிகளின் அறிக்கைகளை நாளின் இறுதியில் ஆய்வு செய்து அடுத்த நாட்களின் படப்பிடிப்பு காட்சிகளின் விவரங்களையும் கூறுவார். ஒவ்வொரு நாட்களின் படப்பிடிப்பு காட்சிகளின் அறிக்கையானது இயக்குநரிடம் காண்பிக்கப்பட்டபிறகு தினமும் தயாரிப்பு அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. இதில் காட்சிகளின் தொடர்பு விவரம், ஒலி மற்றும் கேமரா இவற்றைப்பற்றிய விவரங்களும் அடங்கும்.

படப்பிடிப்பு குழுவினரிடம் கால்ஷீட் வழங்கப்படும். இதில் ஒவ்வொரு படப்பிடிப்பு காட்சிகளும் எங்கு மற்றும் எப்பொழுது நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும். படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டபிறகு அவற்றை இயக்குநர், தயாரிப்பாளர், துறைதலைவர்கள் மற்றும் பலர் தினமும் ஆய்வு செய்வார்கள். மாற்றங்கள் தேவைப்பட்டால் அவை சரிசெய்யப்பட்டு மீண்டும் படமாக்கப்பட்டு இயக்குநருக்கு காண்பிக்கப்படுகிறது. படப்பிடிப்பிற்கு தயாரிப்பு மிக முக்கியமாக கருதப்படுகிறது. இவற்றில், ஸ்கிரிப்ட் மற்றும் போர்ட்ஸ், On-Set Production Begins> Crew Call> Production On-Set> Cast Call> Cast Director Checkin> சிகையலங்காரம்> ஒப்பனை மற்றும் Wardrobe, படபிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்‌ஷன் போன்ற பல பகுதிகளைக் கொண்டது திரைப்பட புரடக்‌ஷன் படப்பிடிப்பாகும். புரடக்‌ஷன் ஆன்செட்-இல் ஸ்கிரிப்ட் ரிவிஷன், ஸ்டோரிபோர்ட், லொகேஷன் மூவ், செட் பில்ட்/டிரஸ், அடிப்படை மின் அமைப்புகள் மற்றும் Initial Grip Setup ஆகியவை அடங்கும். படபிடிப்பில் Shot Grip Setup> Shot Lighting Setup> Shot Direction> Shot Location Sound Setup மற்றும் Action Shoot Footage இவை அடங்கும். இவை அனைத்தையும் உள்ளடக்கியது திரைப்பட தயாரிப்பு ஆகும். இது முடிந்தபிறகு திரைப்படமானது போஸ்ட்-புரொடக்‌ஷனிற்கு தயாராகிறது.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


செப்டம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.