தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்த கதை – 30

F. பிரைட் ஜானி

15th Sep 2018

A   A   A

திரைப்படத்தின் முதல் பகுதியாக Development காணப்படுகிறது. இவற்றில் மிக முக்கிய பகுதியாக Idea> திரைக்கதை> Key Team Members மற்றும் Partners and Investors இதில் அடங்கும். திரைப்படக் கதைக்கு தேவையான ஐடியா தயாரான பிறகு கதையானது Script வடிவில் எழுதப்படுகிறது. திரைப்பட Development பகுதியில் மிகமுக்கிய Key Team Members அங்கத்தினர்களாக தயாரிப்பாளர், Chief Operator> ஆர்ட் டைரக்டர் மற்றும் ஒலி இயக்குனர் போன்றோர்கள் காணப்படுகின்றனர். திரைப்படம் உருவாக்கம் பெற இவர்கள் மிகமுக்கிய காரணமானவர்களாக இருக்கிறார்கள்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு திரைப்படத்தின் பல்வேறு வகையான தயாரிப்பு பணிகளை செய்து வருகின்றனர். திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அல்லது திரைப்படத்திற்காக பணிபுரியும் நபர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரைப்பட ஸ்கிரிப்ட் தேர்ந்தெடுப்பது, எழுதுதல், இயக்குதல் மற்றும் எடிட்டிங் திரைப்பட ஒருங்கிணைத்தல் மற்றும் நிதியுதவி ஏற்பாடு போன்ற பல்வேறு தயாரிப்பு அம்சங்களை திட்டமிட்டு ஒருங்கிணைத்து வருபவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். திரைப்படத் தயாரிப்பின்போது திரைப்பட ஸ்கிரிப்ட்டின் உரிமம் பெற வேண்டியது மிகமுக்கியமானதாகும். அதன்பிறகே ஸ்கிரிப்ட்டை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்பாளர் உதவியுடன் திரைக்கதை எழுதப்படுகிறது.

திரைப்படத் துறையில் கேமரா ஆபரேட்டர், கேமிராமேன் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் திரைப்படக் கேமராவின் தொழில்முறை இயக்குனராகவும் கருதப்படுகிறார். திரைப்படத் தயாரிப்பில் ஒளிப்பதிவை வடிவமைப்பவர் ஒளிப்பதிவாளர் அல்லது புகைப்படம் எடுத்தல் இயக்குநராகவும் இருக்கிறார். இவரை கேமரா ஆபரேட்டர் அல்லது கேமரா காட்சியாளர் எனவும் அழைக்கலாம். திரைப்படத்தில் ஆர்ட் இவற்றில் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பு கலை இயக்குனருக்கு உடையதாகும். இவர் ஒட்டுமொத்தக் காட்சிகளுக்கு பொறுப்பாக இருக்கிறார். இவற்றில் காட்சிப்படுத்துதல், மனநிலைகள், முரண்பாடுகள் மற்றும் உளவியல் ரீதியாக இலக்கு பார்வையாளர்களுக்கு முறையீடு செய்வதைத் தூண்டுகிறது. கலை இயக்குனர் பயன்படுத்தப்படும் காட்சி கூறுகளைப் பற்றிய முடிவுகளை இவர் எடுக்கிறார். இவற்றில் கலை பாணி மற்றும் இயக்கம் இதில் அடங்கும்.

ஒலி சம்பந்தப்பட்ட எல்லாவித தயாரிப்பின் இறுதியில் ஒலித்திருத்தம் அல்லது மாஸ்டரிங் தயாரிப்பில் ஒளிப்பதிவுகளைத் தேர்ந்தெடுப்பதிலும், ஒருங்கிணைப்பதிலும் பொறுப்பு வாய்ந்த தொழில்முறை நிபுணராக ஒலி இயக்குனர் காணப்படுகிறார். திரைப்படங்களில் ஒலிப்பதிவு முழுமையடையாத இடங்களில் ஒலிப்பதிவை சரிசெய்து சரியான ஒலி எடிட்டிங் செய்யப்படுகிறது. திரைப்படத்தில் ஒலி மிகமுக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. திரைப்பட Development பகுதியில் பங்குதாரர் மற்றும் முதலீட்டாளர்களும் மிக முக்கிய நபர்களாகக் கருதப்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பிற்கு இவர்களின் பங்கும் மிக முக்கியமானதாகும். இவற்றில் தயாரிப்பு நிறுவனம், உபகரணங்கள் வாடகைதாரர், Talent Agency> முதலீட்டாளர் மற்றும் Product Placement இதில் அடங்கும்.

திரைப்படத் தயாரிப்பிற்கு தற்போது பல வகையான தயாரிப்பு நிறுவனங்கள் காணப்படுகின்றன. இவர்கள் ஒவ்வொரு மொழியின் அடிப்படையில் திரைப்படங்களை தயாரிக்கின்றனர். திரைப்பட பட்ஜெட் தொகுப்பு தயாரான பிறகு இயக்குனரைப் பற்றிய சுருக்கமான விவரம், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளரின் சில விவரங்களும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படுகிறது. தயாரிப்பாளர் திரைப்படத்தின் முதலீட்டிற்கு தயாரானபிறகு திரைப்படமானது பிரீ-புரடக்‌ஷனுக்கு தயாராகிறது. பொதுவாக திரைப்படத் தயாரிப்பு தொடக்கம் முதல் இறுதியாக திரைப்படம் வெளிவரும் வரை அதனை மூன்று விதமாக பிரிக்கலாம். அவை டெவலப்மெண்ட், தயாரிப்பு மற்றும் வினியோகம் ஆகும். மேலும், தயாரிப்புப் பிரிவை மீண்டும் பிரீ-புரடக்‌ஷன், Principal Photography மற்றும் போஸ்ட்-புரடக்‌ஷன் என மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

திரைப்படத்தில் பல முக்கிய பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றில் மிகமுக்கிய பகுதிகளாக இயக்கம், தயாரிப்பு, கேமரா மற்றும் ஒளி, ஒலி தயாரிப்பு, ஆர்ட் பிரிவு, உடைகள் பிரிவு, முடி மற்றும் மேக்கப், ஸ்பெஷல் எஃபெட், ஸ்டண்ட், போஸ்ட் புரடக்‌ஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ், அனிமேஷன் மற்றும் எடிட்டிங் இதில் அடங்கும். இவ்வாறு ஒரு திரைப்படத்தை உருவாக்க பல்வேறுபட்ட துறைகளின் ஒருங்கிணைந்த பணி மிக முக்கியமானதாகும்.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


2017 ஜூன் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.