தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை - 24

F. பிரைட் ஜானி

03rd Oct 2019

A   A   A

திரைப்பட கேமராவை மூவி கேமரா, திரைப்பட ஒளிப்படக்கருவி அல்லது சினி கேமரா எனவும் அழைக்கின்றனர். திரைப்பட கேமராவானது புகைப்படங்களை விரைவான வரிசை மூலம் படத்தை சென்சார் உதவியுடன் படமாக்கும் ஒரு சாதனமாகும். முற்றிலும் வேறுபட்ட வகையில் திரைப்பட கேமராவானது ஒரே நேரத்தில் பலவிதமான தொடர் நடவடிக்கையை சிறப்பாக எடுக்கும் திறமை கொண்டதாகும். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் கேமராவில் பிரேம்களின் வீதம் விநாடிக்கு அதன் எண்ணிக்கைக் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பிரேம்களின் அடிப்படையிலே திரைப்படங்களின் வேலைகளை போஸ்ட் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் செய்து வருகின்றன. திரைப்படங்களை ஒரு குறிப்பிட்ட சட்ட விகிதத்தில் பார்க்கும் போது கண்களுக்கு மாயத்தோற்றத்தை உருவாக்கி தொடர் படம் போன்ற காட்சியை உருவாக்குகின்றன. 2010-ஆம் ஆண்டு முதல் திரைப்படத்தை படம்பிடிக்க டிஜிட்டல் கேமராக்களே பயன்படுத்தப்படுகின்றன.

மூவி கேமராவின் முன்னோடியாக கடிகாரமானது கருதப்படுகிறது. கடிகாரத்தின் கால அமைப்பைக் கொண்டு பிரான்சிஸ் ரொனால்ட்ஸ் என்பவர் 1845-ஆம் ஆண்டு கண்டுபிடித்த புகைப்பட கருவி மூவி கேமரா கண்டுபிடிக்க மிகவும் அடிப்படைக் காரணமாக இருந்தது. முதல் காப்புரிமை திரைப்பட கேமராவை ஓர்ட்ஸ்வொர்த் டோனிஸ்த்ரோப் என்பவர் 1876-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வடிவமைத்தார். இதனைத் தொடர்ந்து 1888-ஆம் ஆண்டு லூயிஸ் லி பிரின்ஸ் என்பவர் மற்றுமொரு மூவி கேமராவை உருவாக்கி அதற்கான காப்புரிமையையும் பெற்றார். இந்த ஒற்றை லென்ஸ் சினி கேமராவே உலகின் முதல் கேமராவாகக் கருதப்படுகிறது. இந்த கேமராவானது லீட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.

14 அக்டோபர் 1888-ஆம் ஆண்டு லூயிஸ் லி பிரின்ஸ் - இன் இயக்கத்தில் ரௌண்டே கார்டன் சீன் என்ற திரைப்படமானது திரையிடப்பட்டது. இந்த திரைப்படமே உலகின் தொடர் திரைப்படத்தை படம்பிடிக்க முதல்முறையாக ஒரு லென்ஸ் திரைப்பட கேமரா பயன்படுத்தப்பட்ட திரைப்படமாகும். இதன் முதலே திரைப்படக் காட்சிகளை படம்பிடிக்க திரைப்படக் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் வில்லியம் ஃபிரிசீ கிரீனி என்பவர் 1885-ஆம் ஆண்டு இயக்க படங்களை காண்பிக்க ஊடகத்தில் எண்ணெயிடப்பட்ட காகிதத்தை பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியில் கண்டுபிடித்தார். 1889-ஆம் ஆண்டு செல்லுலாய்ட்-ஐ பயன்படுத்தி க்ரோனோ போட்டோகிராபிக் என்ற கேமராவை உருவாக்கி அதற்கான காப்புரிமையையும் பெற்றார். மேலும் கேமராவை பற்றிய ஆய்வில் தாமஸ் எடிசன் மற்றும் லூமியர் சகோதரர்கள் போன்றோர்களும் ஈடுபட்டிருந்தனர்.

திரைப்பட கேமராக்களின் தொடர் வளர்ச்சியால் 16mm, 35mm மற்றும் 75mm என பலவகையான கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் திரைப்படங்களில் டிஜிட்டல் திரைப்பட கேமராக்களே பயன்படுத்தப்படுகின்றன. திரைப்பட படப்பிடிப்பின்போது திரைப்படத்தின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக திரைப்பட கேமராவில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. அவை பிலிம் கேமரா மற்றும் டிஜிட்டல் கேமரா போன்றவையாகும். பிலிம் கேமரா - வானது 16mm மற்றும் 35mm போன்ற காட்சிகளை படம்பிடிக்க பயன்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் கேமராவால், டிஜிட்டல் முறையில் காட்சிகளை படம்பிடித்து டிஜிட்டல் டேப்ஸ், ஹார்ட் டிரைவ் அல்லது மெம்மரி கார்டு போன்றவற்றில் காட்சிகளை பதிவு செய்ய முடியும். டிஜிட்டல் கேமராவின் உதவியுடன் தினசரி காட்சிகளை உடனுக்குடன் பார்க்க முடியும். தற்பொழுது பெரும்பாலும் டிஜிட்டல் கேமராக்களே திரைப்படங்களை படம்பிடிக்க பயன்படுத்தப்படுகிறது.

திரைப்படக் காட்சிகளை படம்பிடிக்க பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான டிஜிட்டல் கேமராக்கள் Arri Alexa, Blackmagic Design Cinema Camera, Canon Cinema EOS, Panavision Genesis, Red Epic, Red Scarlet, Red One மற்றும் Sony CineAlta போன்ற கேமராக்கள் தற்பொழுது பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற டிஜிட்டல் கேமராக்கள் திரைப்படங்களின் தரத்தை டிஜிட்டல் முறையில் உயர்த்துகின்றன. தற்பொழுது இந்திய திரைப்படங்களிலும் டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரஜினி எம்.எம்.எஸ், ஸ்டேன்லி கா டப்பா மற்றும் பாஜிரோ மஸ்தானி போன்ற சில திரைப்படங்கள் டிஜிட்டல் கேமராக்களைக் கொண்டு படமாக்கப்பட்ட இந்திய திரைப்படங்களாகும்.

                                          (திரைப்படத்துறை வளம்பெறும்)

 


2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்
Error
Whoops, looks like something went wrong.