தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை - 23

F. பிரைட் ஜானி

01st Nov 2019

A   A   A

1917 - ஆம் ஆண்டு லங்கா டகான் என்ற திரைப்படமே ஒரே படத்தில் முதன்முதலாக ஒரு நடிகர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து திரையிடப்பட்டது. இத்திரைப்படமானது துந்திராஜ் கோவிந்த் பால்கே என்பவரால் இயக்கப்பட்டு திரையிடப்பட்டது. 1927 - ஆம் ஆண்டு பிலேட் பெராட் என்ற திரைப்படமே முதன் முதலாக சமூக தலைவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த பெங்காலி அமைதி திரைப்படத்தை N.C. லகிரி மற்றும் திரென்த்ர நாத் கங்குலி ஆகியோர் இயக்கினர். 1931 - ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அனிமேஷன் திரைப்படமானது திரையிடப்பட்டது. திரைப்பட வளர்ச்சியின் மிக முக்கிய பகுதியாக இது கருதப்படுகிறது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகைப்பட தயாரிப்பாளர் பாசோ குற்றாச்வாகர் என்பவர் தயாரித்தார்.

திரைப்பட முதல் பெண் இசையமைப்பாளராக ஜாடன் பாய் கருதப்படுகிறார். 1935 - ஆம் ஆண்டு திரையிடப்பட்ட தலாஷி ஹாக் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இவர் இசையமைத்து திரையிடப்பட்டது. 1937 - ஆம் ஆண்டு நௌஜவான் என்ற திரைப்படமே இசை இல்லாமல் திரையிடப்பட்ட முதல் டாக்கி திரைப்படமாகும். இத்திரைப்படத்தை J.B.H.வாடியா இயக்கினார். 1931 - ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் டாக்கி திரைப்படமானது திரையிடப்பட்டது. இதன் பிறகு திரைப்படங்களில் திரைப்பட பாடல்கள் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக மாறியது. 1943 - ஆம் ஆண்டு கிஸ்மத் என்ற திரைப்படத்திலே முதன்முதலாக எதிர்ப்பு ஹீரோ தோற்றத்தில் இரட்டை வேடத்தில் நடித்து திரையிடப்பட்ட முதல் திரைப்படமாகும்.

1946 - ஆம் ஆண்டு நீச்சா நகர் என்ற திரைப்படமே முதன்முதலாக கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படமானது இந்தியன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் சேட்டன் ஆனந்த் என்பவரால் இயக்கப்பட்டது. ஆஸ்கார் அகாடமி விருதுக்காக முதன்முதலாக பரிந்துரைக்கப்பட்ட இந்திய திரைப்படம் மதர் இந்தியா திரைப்படமாகும். இத்திரைப்படமானது 1957 - ஆம் ஆண்டு தயாரித்து திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை மெக்பூப்கான் என்பவர் தயாரித்து திரையிட்டார். திரைப்படங்களில் 9 கதாபாத்திரங்களில் நடித்த முதல் நடிகர் சிவாஜி கணேசன் ஆவார். 1964 - ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் நவராத்திரி திரைப்படமானது திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை A.P. நாகராஜன் என்பவர் தயாரித்தார். இந்த சாதனையை கமலஹாசன் 10 வெவ்வேறு வேடங்களில் நடித்து முறியடித்தார். 2008 - ஆம் ஆண்டு தசாவதாரம் படம் கமல்ஹாசன் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் திரையிடப்பட்டது.

1964 - ஆம் ஆண்டு சுனில் தத் இயக்கத்தில் யாதீன் என்ற கறுப்பு வெள்ளை இந்தி திரைப்படமானது திரையிடப்பட்டது. ஒரு திரைப்படத்தின் கதையிலிருந்து முழுப்பொறுப்பையும் ஒரே ஒரு நடிகர் கவனித்து எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இதுவாகும். உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் நுழையும் வாய்ப்பானது இத்திரைப்படத்தின் மூலம் நடிகருக்கு கிடைத்தது. 1975 - ஆம் ஆண்டு திரையிடப்பட்ட சோலே என்ற திரைப்படமே இந்தியாவின் முதல் 70 மிமீ திரையில் திரையிடப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ரமேஷ் சிப்பி என்பவர் தயாரித்து இயக்கினார். நிர்மல் பாண்டே என்ற நடிகரே முதல் முறையாக சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றவர் ஆவார். 1996 - ஆம் ஆண்டு திரையிடப்பட்ட டாய்ரா என்ற திரைப்படத்தில் பெண் வேடத்தில் நடித்ததற்காக வேலன்சின்னெஸ் திரைப்பட விழாவில் பிரான்சில் வைத்து இவ்விருது வழங்கப்பட்டது.

இந்தியாவில் 2006 - ஆம் ஆண்டு லகே ரஹோ முன்னா பாய் என்ற திரைப்படமே ஐக்கிய நாடுகளில் திரையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராஜ்குமார் ஹிரானி என்பவர் இயக்கினார். இத்திரைப்படமானது நவம்பர் 10, 2006 - ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளில் திரையிடப்பட்டது. 2007 - ஆம் ஆண்டு திரையிடப்பட்ட சிவாஜி; தி பாஸ் என்ற திரைப்படமே இந்தியாவில் முதன்முதலாக 4கே தொழில்நுட்பத்தில் திரையிடப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படமானது ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.சங்கர் இயக்கத்தில் திரையிடப்பட்டது. பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை முதன்முறையாக பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

                                                (திரைப்படத்துறை வளம்பெறும்)

 


நவம்பர் 2016 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்