தொடர்புடைய கட்டுரை

பாரதத்தின் பெருமை சேர்க்க ஒரு பாரத வங்கி

சிதம்பரம் ரவிச்சந்திரன்

25th Sep 2018

A   A   A

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதன் பல்வேறு துறைகளின் வளர்ச்சியும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வங்கிகள் நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வோடு பிண்ணிப் பிணைந்திருக்கும் ஒரு இன்றியமையாத இடமாக மாறிவிட்டிருக்கிறது. மனிதன் நாகரீகம் வளர்ந்து பண்டமாற்றில் இருந்து பணத்திற்கு மாறியபின் தோன்றியவையே வங்கிகள் ஆகும். மனிதன் உண்டாக்கிய பணத்தை சேமித்து வைக்கும் ஒரு பொதுஇடமாக விளங்கிய வங்கிகள் நாளடைவில் பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும், நிதித்துறையிலும் முக்கிய இடம் பிடிக்கத் தொடங்கியது. இந்த வகையில் வங்கிகளுக்கும், நமக்கும் இடையே உள்ள உறவு தற்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்தியாவில் பணபரிமாற்றத்துக்கும், பொருளாதார நிதி தொடர்புகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு கட்டுப்பாட்டு மையமாக விளங்கி வருகிறது.      

ஜூலை 1ம் நாள் தான் பாரத ஸ்டேட் வங்கி தன் செயல்பாடுகளை தொடக்கிய நாள். இந்திய பொருளாதாரத்தின் முக்கியமான கருவாக விளங்குகிற பாரத ஸடேட் வங்கி தோற்றுவிக்கப்பட்ட நாளும் அதுவே ஆகும்.. 

தினமும் ATM இயந்திரத்தின் முன் போய் நின்று பணம் எடுத்தாலும் அல்லது அந்த வங்கிக்கே நேரில் போனாலும் நாம் அந்த வங்கியின் வரலாறு பற்றி சிந்தித்து பார்ப்பது இல்லை. இந்த தருணத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகவும், உலக அளவில் ஒரு மாபெரும் வங்கியாகவும் திகழும் இந்த பாரத வங்கியைப் பற்றி தெரிந்து கொள்வது நம் அறிவையும், சிந்தனையையும் வளப்படுத்தும்.

கல்கத்தாவில் 18ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் 1806 ஜூன் 2ம் தேதியன்று பாங்க் ஆஃப் கல்கத்தா என்று ஒரு வங்கி உருவாக்கப்பட்டது. பிறகு இதன் பெயர் பாங்க் ஆஃப் பெங்கால் என்று மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்த பாங்க் ஆஃப் கல்கத்தா, பாங்க் ஆஃப் பாம்பே, பாங்க் ஆஃப் மதராஸ் ஆகிய மூன்று வங்கிகளும் இணைந்து ஒரு முன்னோடி முதன்மை வங்கியாக பிரெசிடென்சி பாங்க் என்று செயல்படத் தொடங்கியது. இந்த மூன்று பிரெசிடென்சி பாங்குகளும் 1861 வரை ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் அதிகாரத்தையும், உரிமையையும் பெற்றிருந்தன. 1921 ஜனவரி 27ம் நாளில் இவை மூன்றும் நிர்வாக ரீதியாக இணைந்து இம்பீரியல் பாங்க் ஆஃப் இன்டியா என்ற ஒரு வங்கியாக செயல்பட ஆரம்பித்தது. 1955 ஜூலை 1ம் தேதி முதல் இம்பீரியல் பாங்க் ஆஃப் இன்டியா இந்திய அரசின் வங்கியாக செயல்பட ஆரம்பித்தது.

இந்த வங்கியின் கிளைகள் இந்தியாவில் மட்டும் இல்லாமல் பல உலக நாடுகளிலும் செம்மையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் இதன் கிளைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 15,000க்கும் மேல் இருக்கும். உலக அளவில் 36 நாடுகளில் 196க்கும் மேற்பட்ட கிளைகளை அமைத்து ஸடேட் பாங்க் செயல்பட்டு வருகிறது. வங்கி சேவையைத் தவிர காப்பீடு, உயிர் காப்பீடு, பண அட்டை (கிரெடிட் கார்டு), முதலீட்டு சந்தை (கேப்பிட்டல் மார்க்கெட்) போன்ற சேவைகளில் இதன் கிளை சகோதர அமைப்புகள் ஈடுபட்டு வர்த்தக பரிவர்த்தனைகளை செய்து வருகிறது. 41,000க்கும் மேற்பட்ட .டி.எம் மையங்கள் இயங்கி வருகின்றன. விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கடன், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்கான கடன், தொழில் நிறுவனர்களுக்கு தொழில் செய்வதற்கான கடன் போன்ற பலவிதமான கடன்களை வழங்கி தன் பொதுச்சேவையை சிறப்புடன் செய்து வருகிறது

இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய முன்னோடி வங்கியாக இந்திய ஸடேட் வங்கி இயங்கி வருகிறதுஇதன் தலைமை செயலகம் மும்பையில் உள்ளது. இதில் பணி புரியும் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 2.5 லட்சம் ஆகும். இவர்களில் 21%க்கும் மேல் பெண்கள் ஆவர். இங்கு மாற்றுத்திறனாளிகளும் பணி புரிந்து வருகின்றனர்இந்த வங்கி உலக அளவிலும், தேசிய அளவிலும் தன் தன்னிகரில்லாத சேவையால் பல விருதுகளைப் பெற்றுள்ளது. 1955 ஜூலை 1ம் தேதி முதல் ஸடேட் பாங்க் ஆஃப் இந்தியா என்ற பெயருடன் செயல்படத் தொடங்கிய இந்த வங்கியின் சேவைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 1806ம் ஆண்டு முதல் இன்றுவரை செம்மையாக செயல்பட்டுவரும் இந்த வங்கியால் பயன்பெற்று வரும் நாம் நன்றியோடு இதன் சேவைகளை நினைவுபடுத்திக் கொள்வோம்.  

 


ஏப்ரல் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.