தொடர்புடைய கட்டுரை

புயல் பற்றிய விவரங்கள்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

10th Aug 2018

A   A   A

நம் நாடு பருவமழைக் காற்றுகளால் பெரும்பாலான மழையைப் பெறும் ஒரு நாடு ஆகும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளும் தென்மேற்கு பருவமழை காற்றாலும், தமிழகம் வடகிழக்கு பருவமழையாலும் மழை பெறும் பகுதியாகவும் உள்ளதுஇந்தியா உட்பட தெற்கு ஆசிய நாடுகளை சூழ்ந்துள்ள அரபிக்கடலும், வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும் இந்த மழைக்கும், பருவகாற்றுகளுக்கும் முக்கியகாரணமாக இருந்து வருகின்றன. தெற்கு ஆசியா பகுதியில் சைக்லோன் (cyclone) எனப்படும் சுழற்காற்றுகளாலேயே மழைப்பொழிவு நிகழ்கிறதுகடலுக்கு மேல் உள்ள காற்றின் அழுத்தத்திலும், கடலின் தட்பவெப்பநிலையிலும் ஏற்படும் மாற்றங்களால் இந்த சுழற்காற்றுகள் உருவாகின்றன. உலகில் பல பகுதிகளிலும் உருவாகும் புயல்களுக்கு பெயரிடுவது சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பே ஆகும். புயல்கள் என்பவை அதிக அழுத்தத்தில் இருக்கும் காற்று குறைவான அடர்த்தியுடைய இடத்திற்கு சீறிப்பாயும் காற்றின் பாய்ச்சலே ஆகும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் பொருளாதர சேதத்தையும், உயிரிழப்புகளையும், உடைமைகளுக்கு ஏற்படும் நஷ்டங்களையும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும்

தற்போது இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் புயல் பற்றிய சரியான விவரங்களை, சரியான நேரத்தில் ஒரு தொலைபேசி சேவை மூலம் பொதுமக்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் ஒரு சாதாரண மனிதனாலும் புயல் பற்றியும், அது தொடர்பான பல்வேறு விவரங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். புயல்கள் பற்றி செய்திகள் வெளியாகும்போதே அதனால் உண்டாகக்கூடிய சேதங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு தனிமனிதருக்கும், அவர் சார்ந்த குடும்பத்தாருக்கும் இருக்கவேண்டியது அவசியம் ஆகும். இந்த விழிப்புணர்வு இருந்தால்தான் மக்கள் தங்களை நிகழவிருக்கும் பேரிடரில் இருந்து காத்துக்கொள்ளவும், தங்களுடைய உடமைகளை பாதுகாக்கவும் திட்டமிட்டு செயல்பட முடியும். இதற்கு புயல் பற்றிய ஒரு குறைந்தபட்ச அறிவு இருக்கவேண்டியது முக்கியம்

உதாரணமாக புயல் கடலூர் அருகே கரையை கடக்கப்போகிறது என்று தெரிந்தால், கடலூருக்கு 100 அல்லது 200 கி.மீ தூரத்துக்கு அதன் இருதிசைகளிலும் இருக்கும் மக்களும் முன்னெச்சரிக்கை அடையவேண்டும்வானிலை அறிக்கைகள் கொடுக்கப்படும்போது புயல் குறிப்பிட்ட இடத்தைத்தான் கடக்கும் என்று சொல்லப்பட்டாலும், அந்த புயல் மையம் கொண்டுள்ள இடத்தில் இருந்து 200 கி.மீ தூரம் வரைக்கும் அதன் தாக்கம் கண்டிப்பாக இருக்கும் என்பதால், அந்தப் பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் அந்த புயலால் கடுமையான மழையையும், புயல் காற்றையும் எதிர்பார்க்கவேண்டும்அதனால் அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் முதலில் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்அதனால் கடலூரில்தான் புயல் கடக்கும் என்று சொன்னால் காரைக்காலிலோ, நாகப்பட்டிணத்திலோ மழையும், இருக்காது, காற்றும் இருக்காது என்று நினைத்துக்கொள்ளக் கூடாதுஅதனால் புயல் மையம் கொண்டுள்ள இடத்தில் இருந்து அதன் ஆரம் விரிந்து செல்லும் பரப்புக்குள் வரும் பகுதிகள் அணைத்துமே புயலால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும்இதனால் வானிலை எச்சரிக்கை அறிக்கைகள் புயலின் விரிந்த பரப்பு எவ்வளவு தூரம் இருக்கிறதோ அந்தப் பகுதிகள் அனைத்தையும் சேர்த்து ஒரு மொத்தமான வானிலை எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. இந்த வானிலை எச்சரிக்கைகள் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள், ஊடகங்கள் வழியாக பொதுமக்களை சென்று சேரும் விதத்தில் அளிக்கப்படுகிறதுஇவை அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஆகும்

இதற்கும் மேலாக, வீசப்போகும் புயலைப் பற்றி பொதுமக்களே தெர்நிதுகொள்ளவேண்டும் என்றால், மக்கள் தாங்களாகவே ஒரு செல் போன் மூலம் தொடர்பு கொள்வதற்கு 18001801717 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்இந்த எண்ணில் தொடர்பு கொண்டு நமக்கு எந்தவிதமான தகவல் தேவையாக இருக்கிறதோ அதை மட்டும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்புயல் எச்சரிக்கைகள், எந்தெந்த இடங்களில் எவ்வளவு காற்று இருக்கும், கடல் மட்டம் எவ்வளவு தூரத்திற்கு உயரும், அது தரைப்பகுதிக்குள் எவ்வளவு தூரம் வந்து ஊடுருவும், இதனால் ஏற்படக்கூடிய சேதவிவரங்கள் என்னென்ன, கடல் அலையின் உயரம் எவ்வளவு இருக்கும், மீனவர்கள் எந்த நேரங்களில் எல்லாம் கடலுக்கு மீன் பிடிக்க போகக்கூடாது போன்ற விவரங்கள் அனைத்தும் ஒரு வாரம் முன்னதாகவே நாம் தெரிந்துகொள்ளலாம்

புயல், மழை காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் தகுந்த விழிப்புணர்வோடு இருந்து நம்மையும், நம் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வோம். ஊரில் இருக்கும் புயல் பாதுகாப்பு மையங்கள் பற்றிய தகவல், அங்கு சென்று சேர்வதற்கான எளிமையான, சுலபமான வழி போன்றவற்றை முன்கூட்டியே அறிந்துவைத்துக் கொள்வது நல்லது. வெள்ளம் ஏற்படக்கூடும் என்ற நிலையில், முன்கூட்டியே பாதுகாக்கவேண்டிய முக்கியமான பொருள்கள்.. பணம், நகைகள், சான்றிதழ்கள், முக்கியமான பத்திரங்கள், ஒரு டார்ச் விளக்கு, உலர் உணவு, தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, தேவையான அளவுக்கு விரிப்புகள் போன்றவற்றை முன்கூட்டியே தயாராக ஒரு பெட்டியில் சேகரித்து வைத்துக்கொள்வது நல்லதுவீட்டில் உள்ள எல்லா மின்தொடர்புகளையும் முன்னதாகவே துண்டித்துவிட வேண்டும். குறிப்பாக குளிர்சாதனப்பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், .சி, தொலைக்காட்சி போன்றவைமடிக்கணினியையும், செல்போன், அதை மின்னேற்றம் செய்யும் கருவி, முடிந்தால் ஒரு சிறிய வானொலிபெட்டி ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும். விழிப்புணர்வும், போதுமான திட்டமிடலும், சரியான அறிவும், இருந்தால் இயற்கையால் ஏற்படும் சீற்றங்களில் இருந்து நம்மையும், நம் உடைமைகளையும் நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

 


நவம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.