தொடர்புடைய கட்டுரை


பூமியின் வட்டப்பாதை

பி.ரெ. ஜீவன்

03rd Apr 2019

A   A   A

ஒவ்வொரு வருடமும் பூமி சூரியனை சுற்றி வருகிறது. நாம் அனைவரும் அதனுடன் சேர்ந்து சுமார் மணிக்கு 107,000 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு பிரமாண்ட பயணத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நம் அனைவரின் வாழ்க்கையும் இந்த வட்டபாதையின்னுள் அடங்கியுள்ளது.

பூமியின் வட்டப்பாதை ஒரு நீள்வட்ட வடிவத்தில் உள்ளது. எனவே சில மாதத்தில் பூமி சூரியனுக்கு மிக அருகிலும், சில மாதத்தில் பூமி சூரியனுக்கு மிக தொலைவிலும் இருக்கும். பூமிக்கு மிக அருகில் சூரியன் இருக்கும் போது கோடை காலம் வரும் என்றும், பூமிக்கு மிக தொலைவில் சூரியன் இருக்கும் போது குளிர் காலம் வரும் என்றும் பலர் என்னிடம் கூறியுள்ளனர். ஆனால் இது முற்றிலும் தவறு. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை வைத்து காலம் என்ன என்று கூற முடியாது.

ஒரு வருடத்தில் பூமிக்கு மிக அருகில் சூரியன் இருக்கும் நாளுக்கு பெரிஹெலியன் (perihelion) என்று பெயர். அதே வருடத்தில் சூரியன் பூமிக்கு மிக தொலைவில் இருக்கும் நாளுக்கு அபலியன் (aphelion) என்று பெயர். சூரியனை வழிபடும் உலகின் பல பழங்கால கலாச்சாரங்களில் இந்த இரு நாளும் மிக முக்கியமான நாள்.

பெரிஹெலியன் ஜனவரி மாதத்தின் துவக்கத்தில் வரும். அன்று சூரியன் பூமிக்கு மிக அருகில் இருந்தாலும். பூமியின் பெரும்பான்மையான இடங்களில் அன்று குளிர் காலம். அபலியன் ஜூலை மாதத்தின் துவக்கத்தில் வரும். அன்று சூரியன் பூமிக்கு மிக தொலைவில் இருந்தாலும் பூமியின் பெரும்பான்மையான இடங்களில் அது வெயில் காலம். பூமி சூரியனிலிருந்து அபலியன் அன்று பெரிஹெலியனைவிட ஏறக்குறைய 50 இலட்சம் கிலோமீட்டர் அருகில் இருக்கும்.

இன்று உலகெங்கும் பயன்படுத்தும் நாட்காட்டியின் பெயர் கிரகோரியன் நாட்காட்டி (Gregorian calendar). ஆனால் முன்பு ஒரு காலத்தில் ஜூலியன் நாட்காட்டியை (Julian calendar) பயன்படுத்தி வந்தனர். ஜூலியன் நாட்காட்டிக்கும் கிரகோரியன் நாட்காட்டிக்கும் 10 நாட்கள் வித்தியாசம் உண்டு.

கிரகோரியன் நாட்காட்டியிலிருந்து ஜூலியன் நாட்காட்டிக்கு முதன் முதலில் மாறிய நாடு ஸ்பெயின் (Spain). இந்த மாற்றத்தை ஏற்கனவே ஸ்பெயின் அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், இந்த நாளை நினைவூட்டும் வகையில் அந்த காலத்தில் ஸ்பெயின் நாட்டின் முக்கிய புனிதரான அவிலா தெரேசம்மாள் (Saint Teresa of Avila) இயற்கை எய்தினார். 1582 ஆம் ஆண்டு அக்டோபர் 5 முதல் 14 வரை உள்ள நாட்கள் நீக்கப்பட்டு அன்று முதல் கிரகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் வழக்கம் வந்தது. புனித தெரேசம்மாள் அக்டோபர் 4 இரவில் அல்லது அக்டோபர் 15 அதிகாலையில் இறந்திருப்பார்.

ஒவ்வொரு நாடும் படிப்படியாக கிரகோரியன் நாட்காட்டிக்கு மாறியது. 1643 இல் ஐசக் நியூட்டன் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று பிறந்தார். கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடுவோம். ஆனால் இன்று அவரின் பிறந்த நாள் ஜனவரி 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1752 இல் தான் இங்கிலாந்து கிரகோரியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.

பூமியின் வட்டப்பாதையை பயன்படுத்தி பண்டிகைகளை அமைக்கும் பெரும் மதங்களில் ஓன்று கிறிஸ்தவம். டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி வருகிறோம். ஜூலியன் நாட்காட்டியில் டிசம்பர் 25 ஆம் தேதி அருகே பெரிஹெலியன். சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாளை பல மதங்கள் சூரிய பகவானின் திருவிழாவாக உலகெங்கும் கொண்டாடி வந்தது. சூரியனையும் கிறிஸ்துவையும் துவக்க கால கிறிஸ்தவர்கள் ஒப்பிட்டு பார்த்ததால், அன்றே அவரின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். கிரகோரியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பிக்கும் போது பழைய நாளையே கிறிஸ்துமஸ் திருவிழாவுக்கு வைத்துக்கொண்டனர்.

ஜோர்டான் நதியில் இயேசு ஞானஸ்னானம் பெற்றதும், ஞானஸ்னானம் வழங்கிய இஸ்நாபக அருளப்பர் (John the Baptist), இன்று முதல் இவர் ஒளி அதிகரிக்கட்டும், என் ஒளி குறையட்டும் என்று இயேசுவை பார்த்து சொல்லுவார். இதனால் ஜூன் 24 அன்று இஸ்நாபக அருளப்பரின் பிறந்த நாளாக கொண்டாட படுகிறது. ஜூலியன் நாட்காட்டியில் அன்று அபலியனுக்கு மிக அருகே வரும்.

கிறிஸ்தவம் மட்டும் அல்ல, உலகின் பல கலாச்சாரங்களும் இந்த இரு நாட்களையும் கொண்டாடி வருகின்றன. இப்படி பழங்கால மனிதர்கள் பெரிஹெலியன் மற்றும் அபலியன் நாட்களை மிக முக்கியமான நாட்களாக கருதியுள்ளனர். பெரிஹெலியன் நாளில் இருந்து சூரியனின் வெப்பம் பூமியில் அதிகரிக்கும். அபலியன் நாளில் இருந்து சூரியனின் வெப்பம் பூமியில் குறைந்து வரும்.

பூமி சூரியனை சுற்றும்போது வெவ்வேறு காலங்களை பூமியில் உருவாக்குகிறது. சில பூக்கள் சில காலங்களில் மட்டுமே பூக்கும், சில விலங்குகள் சில காலங்களில் மட்டுமே குட்டியிடும். இதை போன்று ஒவ்வொரு காலத்தில் நிகழும் நிகழ்வுகள் அடுத்த வருடம் அதே காலத்தில் நிகழும் என்று எதிர்பாக்கப்படும். இதை பயன்படுத்தி நாம் மாதங்களை உருவாக்கியுளோம்.

மாதங்களை கண்டுபிடித்ததும், ஒவ்வொரு மாதத்தில் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடைபெறும் என்பதையும் கணித்தது மனிதர்களின் மிக பழமையான சாதனை. உலகின் மிக பழமையான நாட்காட்டி சுமார் 17,000 வருடம் பழமையான பிரான்ஸ் நாட்டின் லாசோ குகையில் (Lascaux caves - லாசோ சரியான உச்சரிப்பு, இது பிரெஞ்சு மொழி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் எப்போது தானியங்களை பயிரிடவேண்டும், எப்போது மான்கள் கன்று இடும் போன்ற தகவல்களை அவர்களின் நாட்காட்டி அவர்களுக்கு காட்டியது. இது இயற்கையின் மீது ஒரு புது புரிதலை அவர்களுக்கு கொடுத்தது. இப்படி பழைய கற்காலத்திலேயே லாசோவில் வாழ்ந்த மனிதன் ஒரு கலாச்சாரத்தின் முன்னோடியை கண்டுபிடித்தான். எதிர்காலத்துக்கு திட்டமிட அந்த நாட்காட்டி அவர்களுக்கு உதவியாக இருந்தது.

இன்றைய நாட்காட்டி மட்டுமல்ல கடிகாரமும் நம் முன்னோரின் கண்டுபிடிப்புகளைவிட மிக துல்லியமானது. நேரத்தை மிக துல்லியமாக அளக்க முடியாது என்பதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார். நேரம் நாம் எவ்வளவு வேகமாக அசைகிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது. எப்படி ஆனாலும் நம் வாழ்க்கைக்கு தேவையான அளவு துல்லியமான அளவு நாம் நேரத்தை கணக்கிடுகிறோம்.

அடுத்த பகுதியில் ஏன் கோடைகாலம், குளிர்காலம் போன்ற காலங்கள் வருகிறது என்பதை பற்றி பார்க்கலாம். இந்த காலங்களுக்கும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவுக்கு அதிக தொடர்பு இல்லை. காலங்களுக்கு முக்கிய காரணம் பூமியின் அச்சு. அதை பற்றி அடுத்த மாதம் பார்க்கலாம்.

 


ஜூலை 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.