தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை – 42

F. பிரைட் ஜானி

16th Mar 2019

A   A   A

அனிமேஷன் மற்றும் காட்சி விளைவுகள் துறையானது இந்தியாவில் அதிநவீன வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மிகப்பிரம்மாண்டமான காட்சி விளைவுகள் திரைப்படங்கள் தற்போது இந்தியாவிலும் மிக அதிகமாக தயாரிக்கப்படுகிறது. மேலும் ஹாலிவுட் திரைப்படங்களின் காட்சி விளைவுகளும் இந்திய காட்சி விளைவுகள் நிறுவனங்கள் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது. மிகவும் நல்லதொரு எதிர்காலம் கொண்ட துறையாகக் காட்சி விளைவுகள் மற்றும் அனிமேஷன் துறையானது தற்போது காணப்படுகிறது. திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் விளம்பரங்களுக்கும் காட்சி விளைவுகள் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் 2D அனிமேஷன், 3D அனிமேஷன், காட்சி விளைவுகள் இது போன்ற பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1956-ஆம் ஆண்டு இந்தியாவில் அனிமேஷன் வளர்ச்சியடைய டிஸ்னி ஸ்டுடியோவின் கிளேர் வீக்ஸ் என்ற அனிமேட்டர் மிகவும் உதவினார். இவர் பாம்பி என்ற திரைப்படத்தில் பணிபுரிந்தவர். இவரின் உதவியால் 1957-ஆம் ஆண்டு தி பான்யான் டீர் என்ற திரைப்படமானது திரையிடப்பட்டது. மேலும், இதன் தொடர்ச்சியாக 1974-ஆம் ஆண்டு Ek Anek Aur Ekta என்ற திரைப்படமானது திரையிடப்பட்டது. 1986-ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சித் தொடர்களிலும் அனிமேஷன் மற்றும் காட்சி விளைவுகள் பயன்படுத்தப்பட்டன. முதல் அனிமேஷன் மற்றும் காட்சி விளைவுகள் பயன்படுத்தப்பட்ட தொலைக்காட்சித் தொடர் காப்டன் வ்யோம் ஆகும். 2008-ஆம் ஆண்டு ரோட்சைடட் ரோமியோ என்ற முதல் இந்திய 3D அனிமேஷன் திரைப்படமானது திரையிடப்பட்டது.

காட்சி விளைவுகள் தற்போது இந்தியத் திரைப்படங்களிலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம், Fan, M.S. Dhoni Untold Story, சுல்தான், Shivaay, மொகன்ஜோ தாரோ, டான் மற்றும் கிரிஷ் போன்ற இந்தியத் திரைப்படங்களில் மிக அதிகமாக காட்சி விளைவுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஹாலிவுட்டின் மிகப்பிரம்மாண்ட திரைப்படங்களான த ஜங்கிள் புக், அயர்ன் மேன், ஹாரி போட்டர் மற்றும் அவென்சர்ஸ் இது போன்ற மிகப்பிரம்மாண்ட திரைப்படங்களிலும் இந்திய காட்சி விளைவுகள் நிறுவனங்கள் உதவியுள்ளன.

அனிமேஷன் மற்றும் காட்சி விளைவுகளின் அதிநவீன வளர்ச்சியால் தற்போது இதன் தொழில்நுட்பங்கள் காட்சி விளைவுகள், Motion Capture, Virtual Reality, Arugmented Reality, Mixed reality, Cross Reality போன்ற பலவிதமான தொழில்நுட்பங்கள்   காணப்படுகின்றன. மேலும், 3D திரைப்படங்களை 3D கண்ணாடிகள் அணியாமலேயே பார்க்கும் தொழில்நுட்பமும் விரைவில் வரவிருக்கிறது. 3D முதல் 12D வரை பல்வேறுபட்ட தொழில்நுட்பங்களும் தற்போது காணப்படுகிறது. காட்சி விளைவுகள் பற்றிய ஆய்வுகளை பல்வேறு நிறுவனங்கள் தற்போது நடத்தி வருகின்றன. மேலும், பல இந்திய காட்சி விளைவுகள் நிறுவனங்கள் மாணவ மாணவிகளுக்கு நேரடியாக நிறுவனங்களிலே பயிற்சி கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். இவற்றை கற்றுக்கொடுக்க இந்தியா முழுவதும் காட்சி விளைவுகள் பயிற்சி மையங்களும் காணப்படுகிறது.

பல வெளிநாட்டு காட்சிவிளைவு நிறுவனங்கள் இந்திய காட்சி நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் அந்த நிறுவனங்களின் அமைப்பை ஏற்படுத்தி பலபேருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கின்றன. கர்நாடக மற்றும் கேரள அரசு அனிமேஷன் மற்றும் காட்சி விளைவுகளின் வளர்ச்சிக்காக பல நிறுவனங்களுடன் இணைந்து பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தற்போது இந்தியாவிலும் பல அமைப்பு மற்றும் சங்கங்கள் இதன் வளர்ச்சிக்காக காணப்படுகின்றன.

இந்தியாவில் அனிமேஷன் மற்றும் காட்சி விளைவுகளை வளர்ச்சியடைய செய்ய The Animation Society of India, Association of Bangalore Animation Industry, The Society of Animation in Delhi, Media & Entertainment Association of India மற்றும் பல அமைப்புகள் காணப்படுகின்றன. இந்த அமைப்புகள் மாணவர்களுக்கென சிறப்பாக பல்வேறுபட்ட அனிமேஷன் நிகழ்வுகளை நடத்துகின்றன மற்றும் இதன் வளர்ச்சிக்காகவும் உதவுகின்றன. மேலும், ஒவ்வொரு வருடமும் பல வகையான போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த அனிமேட்டர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அனிமேஷன் மற்றும் காட்சி விளைவுகள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமானதாக காணப்படுகிறது. இந்தியாவிலும் இதன் வளர்ச்சி மற்றும் இதற்கான வேலை வாய்ப்புகளும் மிக அதிகமாகக் காணப்படுகிறது.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


2018 ஜூன் மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.