தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை – 50

F. பிரைட் ஜானி

28th Jan 2019

A   A   A

திரைப்படங்களின் தொழில்நுட்பங்கள் பலவகையாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது 2D, 3D, 4D, IMAX, VR மற்றும் பல வகைகளாககப் பிரிக்கலாம். சாதாரணமாக நாம் பார்க்கும் படங்களை 2D படங்கள் எனவும் ஒரு படத்தை 3D கண்ணாடி அணிந்து பார்த்தால் அதனை 3D படங்கள் எனவும் அழைக்கிறோம். நாம் பார்க்கும் 3D திரைப்படங்களில் இருந்து மாறுபட்டதொரு திரைப்படமாக 4D திரைப்படம் காணப்படுகிறது. 3D திரைப்படங்களைவிட பொழுதுபோக்கு காட்சிகளுக்கு ஏற்ற திரைப்படமாகவும் மற்றும் திரைப்படங்களில் பார்க்கும் காட்சிகளை நேரடியாக உணரவும் 4D திரைப்படங்களில் முடியும். 4D திரைப்படங்களை பார்க்கும்போது நம்மால் மழை, காற்று, வெப்பநிலை மாற்றங்கள், ஸ்ட்ரோப் விளக்குகள் மற்றும் அதிர்வு நிலைகளையும் உணர முடியும். 4D திரைப்படங்களின் விளக்கக்காட்சிகளைப் பார்க்கும்போது ஒரு சில சென்டிமீட்டர் அளவிற்கு அதிர்வுகளை ஏற்படுத்தலாம்.

பொதுவாக நாற்காலி விளைவுகளில் காற்று ஜெட், நீர் ஸ்ப்ரே, கால் மற்றும் பின் டிக்கெட் ஆகியவையும் அடங்கும். அதாவது ஆடிட்டோரியம் விளைவுகளில் புகை, மழை, மின்னல், குமிழிகள் மற்றும் வாசனை ஆகியவை அடங்கும். பெரும்பாலும் 4D திரைப்படங்களின் டிக்கெட் விலை சாதாரண டிக்கெட் விலையை காட்டிலும் உயர்ந்ததாகவே காணப்படுகிறது. ஏனெனில் 4D திரைப்படங்களை அதற்கெனவே உருவாக்கப்பட்ட 4D திரையரங்குகள் மற்றும் சில பொழுதுபோக்கு இடங்களில் காணப்படும் சிறப்பு 4D அரங்கங்களில் மட்டுமே காண முடியும். மேலும் 3D திரைப்படங்களில் மிகச்சிறந்த திரைப்படங்களையும் 4D திரைப்படங்களாக வெளியிட முடியும். Journey to the Centre of the Earth மற்றும் Avatar போன்ற திரைப்படங்களையும் 4D திரைப்படங்களாக பார்க்க முடியும். Mobile 4D திரையரங்குகளும் தற்போது காணப்படுகின்றன இவை பேரூந்துகள் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தும் வகையில் காணப்படுகின்றன.

4D திரைப்படங்களை நாம் நான்கு விதமான பரிமாண வடிவில் பார்க்கமுடியும். திரைப்படங்களில் நான்காவது பரிமாணத்தின் குறிப்பிடத்தக்க பல்வேறு அம்சங்களை வழங்குவதற்கு ஏற்றவாறு சென்சார் ரவுண்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மெல்-ஓ-விஷன் ஆகியவையும் இவற்றில் அடங்கும். 2015-ஆம் ஆண்டின் ஆய்வின்படி உலகெங்கிலும் சுமார் 530 4D திரையரங்குகள் காணப்படுகின்றன. இந்தியாவில் 4D திரையரங்குகள் மும்பை, புனே, சென்னை, கொயம்புத்தூர், கொல்கத்தா, மைசூர், அஹமதாபாத், செகண்டிராபாத் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. 1960-ஆம் ஆண்டு முதல் 4D திரைப்படங்களுக்கான ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதன் முயற்சியாக 1960-ஆம் ஆண்டு திரையிடப்பட்ட தி சென்ட் ஆப் மைஸ்டிரி மற்றும் 1974-ஆம் ஆண்டு திரையிடப்பட்ட எர்த்குவேக் திரைப்படத்திலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதன் வெற்றியாக 1984-ஆம் ஆண்டு திரையிடப்பட்ட தி சென்சோரியம் முதல் 4D திரைப்படமாக காணப்படுகிறது.

சென்சார் ரவுண்டின் வெற்றியின் தொடர்ச்சியாக ஃபேண்டாசவுண்ட் பயன்படுத்தப்பட்டது. இது ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டமாக காணப்பட்டது. மிகச்சிறந்த 4D திரைப்படங்களை தயாரிக்க 4DX, D-Box, MX4D மற்றும் ரெட் ரோவர் போன்ற பல நிறுவனங்கள் காணப்படுகின்றன. இந்த வகையான திரையரங்குகளில் பொதுவாக fog machine, strobes, scents, bubbles, snow, water sprays, wind/air போன்றவை காணப்படும். 1991-ஆம் ஆண்டு ஜிம் கென்சன் இயக்கத்தில் திரையிடப்பட்ட முப்பெட் விஷன் 3D திரைப்படம் மற்றும் 1996-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் திரையிடப்பட்ட டெர்மினேட்டர் 2 3D: பேட்டில் அக்ராஸ் டைம் இது போன்ற திரைப்படங்களில் 4D திரைப்பட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. 2003-ஆம் ஆண்டு ஜார்ஜ் ஸ்கிரைப்னர் இயக்கத்தில் வால்ட் டிஸ்னி அனிமேஷன் நிறுவனத்தின் உதவியுடன் மங்கிஸ் ஃபில்ஹர் மேஜிக் திரைப்படமானது திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தையும் 4D திரைப்படமாக பார்க்க முடியும். இதனை வால்ட் டிஸ்னி தீம் பார்க் மற்றும் ரிசார்ட்டில் பார்க்க முடியும்.

யூனிவெர்சல் ஸ்டுடியோ தயாரிப்பில் 2012-ஆம் ஆண்டு Despicable Me: Minion Mayhem என்ற 4D 14 நிமிட simulator ride உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 2016-ஆம் ஆண்டு திரையிடப்பட்ட பேட்மேன் V சூப்பர்மேன்: டான் ஆப் ஜஸ்டிஸ், பிக்செல்ஸ், மாஸ் எபெக்ட்: நியூ எர்த் 4D, லியோ நெக்சோ நைட்ஸ் 4D: தி புக் ஆப் கிரியேட்டிவிட்டி, போன்ற திரைப்படங்களும் 4D திரைப்படத் தொழில்நுட்பங்களில் தயாரித்து திரையிடப்பட்டன. திரைப்படத் தொழில்நுட்பங்கள் தற்போது அதிநவீன வளர்ச்சியைப் பெற்று காணப்படுகிறது.

(திரைப்படத்துறை வளம்பெறும்

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.