தொடர்புடைய கட்டுரை


எந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்?

Dr. பா. சாம்ராஜ்

19th Jun 2018

A   A   A

இந்தியாவின் மரங்களிலிருந்து எண்ணெய் வித்துகள் ஏராளமாக உற்பத்தி செய்யப்பட்டாலும், விளக்கெண்ணெய் விசேஷமானது. விளக்கெண்ணெயை, ‘ஆமணக்கின் குருதி என்றுகூடச் சொல்லலாம். ஆமணக்குச் செடி மண்ணின் நுட்பமானக் கூறுகளை உறிஞ்சி, உழைத்துச் சேமித்த நுண் மருந்துகள்தான் விளக்கெண்ணெயில் இருக்கின்றன. சுருக்கமாக, விளக்கெண்ணெய் ஒரு நலப்பொக்கிஷம் ஆகும்.

தமிழகம் முழுவதும் இதன் கொட்டை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்காக வயல்வெளிகளின் ஓரங்களிலும் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலும் வளர்க்கப்படுகிறது. விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது.

ஆமணக்கின் இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை சிறந்த மருந்துவப்பயன் கொண்டவை. இதில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செவ்வாமணக்கு ஆகிய மூன்று முக்கிய வகைகள் உள்ளன.

ஆமணக்கு செடியின் இலைகள் கை போன்ற தோற்றமளித்து மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இவை பெரியதாகவும், அகன்றும், மேற்பகுதி வட்டமாகவும் தாவரத்தின் நுனியில் பெரிய கொத்தாக பூத்து காணப்படும். பத்து அடி வரை உயரமாக வளரக்கூடிய தாவரம். மிருதுவான முட்களுடன்கூடிய காய்கள் காய்க்கும். இந்த காய்கள் காய்ந்தால் வெடிக்கும் தன்மையுடையது. பழங்கள் கூர்மையான ஆறு பிரிவுகளாக காணப்படுகிறது. வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்திலும் பூக்கள் கொத்துக்கொத்தாக கிளைகளின் கடைசி பாகத்தில் காணப்படுகிறது. இந்த ஆமணக்கு செடியின் விதைகளிலிருந்து எடுக்கும் எண்ணெய் மருந்தாகவும் பயன்படுகிறது. விதைகள் நீள்வட்டமானவை. யுபோர்பியேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த இந்த ஆமணக்கு செடி புற்றுநோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது

அமெரிக்காவில் இந்த ஆமணக்கு செடியை அலங்கார மரமாக நட்டு வளர்த்து வருகிறார்கள். இதன் விதையில் இருந்து விளக்கெண்ணெய் எடுத்து உபயோகப்படுத்தி வருகிறார்கள். சோப்பு, மை, பிளாஸ்டிக் மற்றும் தோல் தயாரிக்க பயன்படுகிறது. இலைகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கவும், தண்டுபாகம் காகிதம் தயாரிக்கவும், எண்ணெய் அரைத்தபிறகு கிடைக்கும் துருவலை பிண்ணாக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் கொண்டாடப்படும் சமய வழிபாடுகளில் இந்துக்கள் கொண்டாடும் கார்த்திகை விழா, விளக்குக்கு முக்கியத்துவம் தரக்கூடியது. கார்த்திகை விளக்கில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் பல வகைப்படும். அவையாவன:

1. நெய் விளக்கு:

பசும் பாலிலிருந்து எடுக்கப்படும் நெய்யிலிருந்து விளக்கு எரிக்கப்படுகிறது. இது சகலவித செல்வத்தையும், வீட்டிற்கு நலனையும் தரும் என்று நம்பப்படுகிறது.

2. நல்லெண்ணெய் விளக்கு:

எல்லாப் பீடைகளையும் விலக்கும். விளக்கெண்ணெய் உடல் ஆரோக்கியத்தை தரும். மேலும், புகழ், உறவினர், சுகம் ஆகியவற்றை விருத்தி செய்யும் என்றும் நம்பப்படுகிறது.

3. முக்கூட்டு எண்ணெய்:

வேப்பெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்தது முக்கூட்டு எண்ணெய். இதில், தீபம் இடுவதால் செல்வம் உண்டாகும். குலதெய்வத்திற்கு உகந்த எண்ணெய் என்பது நம்பிக்கை. மேலும் கார்த்திகை விளக்கில் உபயோகப்படும் ஐந்து கூட்டு எண்ணெய்யில் விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவைகளை சேர்த்து தயாரித்து கார்த்திகை விளக்கில் பயன்படுத்துகிறார்கள்.

4. புன்னைக்காய் எண்ணெய்:

கன்னியாகுமரி மற்றும் தெற்கு கேரளாவில் புன்னைக்காய் எண்ணெய் கார்த்திகை விளக்கில் அதிகமாக பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைக்கு புன்னைக்காய் எண்ணெய் அரிதாக இருப்பதால் அதற்கு பதிலாக சந்தையில் எளிதாக கிடைக்ககூடிய விளக்கெண்ணெய்யை பயன்படுத்துகிறார்கள். புன்னைக்காய் எண்ணெய் கண்களுக்கு குளிர்ச்சியும் அந்த எண்ணெய்யிலிருந்து வெளிவரும் புகையினால் பூச்சிகள் வீட்டுக்குள் அணுகாது ஓடிவிடும் என்றும் நம் முன்னோர்கள் நம்பினார்கள். இதன் தாவரவியல் பெயர் கலோஃபில்லம் இனோபிலம் என்பதாகும். இது கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்கு கரையோர இந்தியாவிலிருந்து மலேசியா ஆஸ்திரேலியா வரை பரவியுள்ளது.

ஒரு மரத்திலிருந்து ஐம்பது கிலோ கொட்டைகளும், இருபத்தைந்து கிலோ பருப்பும் கிடைக்கிறது. புன்னை மர விதைகளிருந்து சுமார் 60 சதவீதம் எண்ணெய் உள்ளது. இந்த பச்சை நிற எண்ணெய் தொழுநோய் மற்றும் காசநோயை குணப்படுத்தவல்லது.

 


ஜனவரி 2018 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.