தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை - 36

F. பிரைட் ஜானி

18th Jun 2018

A   A   A

பாலிவுட் சினிமா இந்தி சினிமா என அழைக்கப்படுகிறது. இந்த சினிமாவானது மும்பை நகரை மையமாகக் கொண்டு இந்தி மொழியில் தயாரித்து திரையிடப்படுகிறது. மேலும் இந்தியாவில் மிகவும் அதிகமான திரைப்படங்களை தயாரிப்பதிலும் பாலிவுட் திரையுலகம் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. திரைப்படத் தயாரிப்பில் தற்பொழுது பாலிவுட் திரைப்படத்தில் பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாலிவுட் திரைப்படங்களின் தரமும் மிகவும் அதிகரித்து வருகிறது.

1930-ஆம் ஆண்டுகளில் திரைப்படத்தின் தரம் மிக குறைவாகவே காணப்பட்டன. திரைப்படங்களானது பாலிஸ்டிரீனைப் போன்ற கட்டுமானங்கள், சாளரங்கள், திட சுவர்கள், பெரிய தாள்கள் மீது வரையடிக்கப்பட்ட காட்சிகள் அல்லது வடிவமைக்கப்பட்ட பெரிய துண்டுகள் போன்றவற்றையே பயன்படுத்தி திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் திரைப்படங்கள் அனைத்தும் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டன. அக்காலத்திலும் திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்பொழுது சமீபத்திய பாலிவுட் திரைப்படங்களில் சிறப்பு காட்சிகளுக்காக காட்சி விளைவுகள் என அழைக்கப்படும் Visual Effects மிக அதிகமாக திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு திரைப்படங்களின் தரமும் மிக உயர்ந்து காணப்படுகிறது.

கோச்சடையான் திரைப்படமானது மே 2014-ஆம் ஆண்டு சௌந்தர்யா என்பவரால் இயக்கப்பட்டு திரையிடப்பட்டது. கோச்சடையான் திரைப்படமானது 3D இயக்க தொழில்நுட்பமான Motion Capture தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. பாலிவுட் திரைப்படங்களில் முதன்முறையாக Motion Capture தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரையிடப்பட்ட முதல் திரைப்படமாகும். அதே போல் இந்த திரைப்படங்களில் நடிப்பவர்கள் நடிக்கும்போது Motion Capture Suites அணிந்து நடிக்க வேண்டும். ஹாலிவுட்டில் Advanced Motion Capture - இல் தயாரிக்கப்பட்டு மிக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற தி போலார் எக்ஸ்பிரஸ் திரைப்படத்தை மையமாகக் கொண்டு கோச்சடையான் தயாரிக்கப்பட்டது. தி போலார் எக்ஸ்பிரஸ் திரைப்படமானது நவம்பர் 2004-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது.

ஜனவரி 2009-ஆம் ஆண்டு நிகில் அட்வானி என்பவரின் இயக்கத்தில் சண்டி சௌக் டு சைனா என்ற திரைப்படமானது திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சிகளுக்காக மிகவும் திட்டமிடப்பட்ட wire work மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டு காட்சிகள் உண்மைபயான சண்டைக்காட்சிகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின. இது போன்ற பல திரைப்படங்களில் காட்சிகளுக்காக பலவிதமான கம்ப்யூட்டர் கிராபிக் வேலைகள் பயன்படுத்தப்படுகிறது.

பாலிவுட் திரைப்படங்களில் கிக், பாடிகார்ட், தூம், பாங் பாங் மொகங்ஜோ தாரோ போன்ற திரைப்படங்களில் சிறந்த சண்டைக் காட்சிகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் பாலிவுட் சிறந்த 3D திரைப்படங்களாக ரோபோட், ரா ஒன், ராஸ் 3D, செஞ்சுரி 3D போன்ற திரைப்படங்கள் காணப்படுகின்றன. மிக அதிகமாக காட்சி விளைவுகள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களில் ரா ஒன், கிரிஷ், ரோபோட் போன்றவைக் காணப்படுகின்றன. இதன் மூலமாகவே பிளாஸ்டிங் எ டிரெயின், பிளாஸ்டிங் எ ஹோல் பில்டிங் மற்றும் பல அசாதாரண காட்சிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. சிறந்த கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் திரைப்படங்கள் முகல் இ அசாம், ஜோதா அக்பர் போன்ற திரைப்படங்களாகும். திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளுக்காக 1000-ற்கு மேற்பட்ட குழு அங்கத்தினர்கள் தேவைப்படுகிறார்கள். சண்டைக்காட்சிக்காக முகல் இ அசாம் திரைப்படத்தில் 2000 ஒட்டகங்கள், 4000 குதிரைகள் மற்றும் 8000 ஆட்கள்   பயன்படுத்தப்பட்டனர். ஜோதா அக்பர் திரைப்படத்தில் இந்த வகையான அனைத்துக் சண்டைக் காட்சிகளும் கணிணியில் உதவியுடன் உருவாக்கப்பட்டன. திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் இசையின் தரமும் தற்போது உயர்ந்து காணப்படுகிறது.

சிறந்த பாலிவுட் ஆக்‌ஷன் திரைப்படங்களாக டான், அக்னீபாத், தூம் 3 திரைப்படங்கள் காணப்படுகிறது. இது போன்ற ஆக்‌ஷன் திரைப்படங்களின் காட்சிகளானது கருவிகள் மற்றும் கணினியின் உதவியுடன் உருவாக்கப்பட்டன. இதனால் திரைப்படத்தில் கதாநாயகன் ஒரு கட்டிடத்திலிருந்து இருந்து அடுத்த கட்டிடத்திற்கு குதிப்பது போன்ற மாய தோற்றத்தை கணினியின் உதவியுடன் உருவாக்க முடியும். திரைப்படங்களை 3D தொழில்நுட்பத்தில் பார்க்கும்போது புதுவிதமான அனுபவத்தை உணரமுடியும். இந்தியாவில் சோட்டா சேட்டன் என்ற திரைப்படத்திலிருந்து 3D தொழில்நுட்பமானது பயன்படுத்தப்படுகிறது. நவீன 3D தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பாலிவுட் திரைப்படங்கள் ஹாண்டட், டான் 2, ராஸ் 3D, ரா ஒன் போன்ற திரைப்படங்களாகும். பாலிவுட் திரைப்படத்தின் தரம் தற்போது உயர்ந்து காணப்படுகிறது.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


டிசம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.